Tuesday, May 20, 2008

சந்தனம் குங்குமம் கொண்ட ....

சந்தனம் குங்குமம் கொண்டதாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
(சந்தனம்)


ஹாப்பி பர்த்டே டு யூ..ஹாப்பி பர்த்டே டு யூ
ஹாப்பி பர்த்டே டு யூ..ஹாப்பி பர்த்டே டு யூ


வட்டம் போடும் கண்கள் வலை வீசி வந்து
வானத்து மீன் எனக் கொண்டாடுது
மொட்டுப் போன்ற நெஞ்சம் சதிராட்டம் ஆடி
மோகனப் புன்னகை முன்னாடுது
பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது
(சந்தனம்)


பொன்னைத் தேடும்போது பூப்போல வந்து
மாளிகை ஓரத்தில் நின்றாடுது
இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
காவிய வள்ளலைக் கண்டாடுது
பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது
பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது
(சந்தனம்)


ஹாப்பி பர்த்டே டு யூ..ஹாப்பி பர்த்டே டு யூ
ஹாப்பி பர்த்டே டு யூ..ஹாப்பி பர்த்டே டு யூ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி