வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
தென்றல் தனை துணைக்கழைத்து
மெல்ல மெல்ல அடி எடுத்து
இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
தென்றல் தனை துணைக்கழைத்து
மெல்ல மெல்ல அடி எடுத்து
இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் போதும்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த
மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதம்மா நாணம்
தமிழ் மண்ணில் பிறந்து வந்த
மங்கை என்ற காரணத்தால்
என்னை வந்து தடுக்குதம்மா நாணம்
வருக வருக திருமகளின் முதல் மகளே
கையிரண்டில் உனை அணைத்து
கண்ணிரண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகு தான்
கையிரண்டில் உனை அணைத்து
கண்ணிரண்டில் விருந்து வைத்து
கற்பனையில் மிதப்பதும் ஓர் அழகு தான்
செம்பவழ இதழ் எடுத்து
மின்னுகின்ற மலர் எடுத்து
சேர்த்து வைத்து கொடுப்பதுவும் அழகு தான்
வருக வருக திருமகளின் முதல் மகளே
நீ வாழ்க வாழ்க கலை மகனின் தலை மகனே
டி.எம்.எஸ்: வருக வருக தேடி வந்த செல்வமே
நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி