தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
மனையறம் தனை காக்க நான் இருக்க
என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க
இல்லறம் நலமாக துலங்காதோ
புவி இன்பம் எல்லாம் இங்கு விளங்காதோ
தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும் தான்
காதலை எதிர்பார்க்கும் பெண் மனமும்
ஓரினம் என்பதுதான் புரியாதோ
என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ
தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்
Thursday, May 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி