Thursday, May 22, 2008

நாடகமெல்லாம் கண்டேன் ...

நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே .....
உங்கள் அன்பால் நேரிலே ...... (நாடகம் )

கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே
எனையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
உன்னழகை பார்த்திருக்கும் ....
சுவாமி ..... கண்ணே .....
உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே
கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே
வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா

ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே ....
பேரன்பால் நேரிலே .... (ஈருடல் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி