Wednesday, January 8, 2020

சிங்காரா வா வா

பழம் பாலைக் காய்ச்சி வச்சு 
பத்து நாளும் ஆயிருச்சு -ஹைய்யோ 
எனக்கு கல்யாண நேரம் வந்து 
காத்திருந்து போயிருச்சு 
ஹி ஹி  ஹிஹி 

சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 


சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 

தூங்காமல் காத்திருக்கேன் 
தோகமயில் வாகனனே 
தூங்காமல் காத்திருக்கேன் 
தோகமயில் வாகனனே 
என் தோழி கூட உன்னைப் பார்க்க 
துடிக்கிறாளே மோகனனே 
மோகனனே ஏ ஏ ஏ அ 

சிங்காரா 
சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 


அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி
அதோ வராண்டி
பழனி ஆறுமுகந்தாண்டி 
ஆடும் மயில் ஏறிக்கிட்டு 
காடு மலை தாண்டிக்கிட்டு 
அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி 
ஆதியிலே தினைபுலத்தில் 
ஆயர் ஓட்டும் வேளையிலேயே 
ச்சோ ச்சோ 
ஆதியிலே தினைபுலத்தில் 
ஆயர் ஓட்டும் வேளையிலேயே
ஆசை கொண்டு வேடனை போல 
வேடம் போட்ட வேல்முருகன் 
அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி  

(அவர் ஏன் இங்கே வரப்போறாரு !
ஏன் வர மாட்டார் ?
அவர் தெய்வயானை வீட்டுக்கு போயிருப்பாரு )

ஆகா உனக்கென்ன ஆணவமடி 
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ  
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ  இ இ 
தெய்வயானையை  பற்றியே 
மானிடம் சொல்லவே 
ஆகா உனக்கென்ன ஆணவமடி 

போகாத இடத்துக்கே போன நெஞ்சை இங்கே 
சொல்லாதே சொல்லாதே 
புரியாமல் உளறாதே 
ஆகா உனக்கென்ன ஆணவமடி 

வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே ..நாயகரே 
கள்ளி தெய்வயானையை 
காணவே சென்றீர் என்று 
சொல்லியே என்னை இவள் 
சோதனை செய்துவிட்டாள் 
சொல்லியே என்னை இவள் 
சோதனை செய்துவிட்டாள் 
வள்ளி நாயகரே
 வந்தனமைய்ய
வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே
நாயகரே ...

Wednesday, January 1, 2020

நீல வான பந்தலின் கீழே

நீல வான பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில்
இவ்வுலகம் கிடக்குதடா  (நீல வான ....)

காடு மலை வயல்கள் எல்லாம்
ஓ ஓ ஓகோகோகோ 
களஞ்சியங்கள் ஆகும்டா
பாடுகின்றன கடலும் நெருப்பும் 
படை வரிசை ஆகும்டா  (நீல வான ..)

சூரியனை பந்தாடி சுழல்வது தான் நாட்களாடா
ஓ ஓ ஓகோகோகோ
காரியமாய்  காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஓகோ  (நீல வான ...)

பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு  சட்டம்  ஓகோகோ  (நீல வான ..)