Friday, May 30, 2008

உன்னைப் பார்த்து .....

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்


தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

6 comments:

Sakthi said...

அற்புதம் அனால் பாடலை எழுதியவரின் பெயரையும் சேர்த்து எழுதி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

Unknown said...

அருமை மக்கள் திலகம் வாழ்க தமிழ்

chandru said...

தயவு செய்து பட விவரங்கள் அனைத்தயும் கொடுக்க வேண்டுகிறேன்

பூங்குழலி said...

தர முயல்கிறேன் -நன்றி சந்துரு

chandru said...

பட விவரங்கள் என்னிடம் உள்ளன,தேவை பட்டதை கேட்கவும்.உங்கள் முயற்சிக்கி வயதான(78) என் பாராட்டுக்கள்

பூங்குழலி said...

மிக்க நன்றி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி