Monday, January 5, 2009

அச்சு நிமிர்த்தவண்டி

பாராண்ட மன்னரெல்லாம் பணிந்திருந்த பூமியிலே
இந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா
ஆ ஆ ஆ
இந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா

அச்சு நிமிர்த்தவண்டி
ஆளை குடை சாய்க்கும் வண்டி
அஞ்சாத வண்டி இதுதாண்டி
என் தங்கமே தங்கம்
ஆளைப் பாரு பணக்காரண்டி
ஆமா சிங்கமே சிங்கம்
யாருக்கும் அஞ்சாத வண்டி
என் சிங்கமே சிங்கம்
யாருக்கும் அஞ்சாத வண்டி


ஆலாட்டம் போட்டுக்கிட்டு காளை போல துள்ளுறான்
அந்த வாலாட்டம் நம்ம கிட்ட வேண்டாம் ன்னு சொல்லிடுங்க


டபாச்சாரி வேலை பண்ணாதே
அட சிங்கமே சிங்கம்
டபாச்சாரி போலவே துள்ளாதே
போடு தங்கமே தங்கம்
டபாச்சாரி போலவே துள்ளாதே

அஞ்சாறு பெத்திருந்தா அரசனும் ஆண்டியடா
இதை அறியாதவரில்லே இங்கு பாரு
அபிவிருத்தி செய்யாதே
இதை அவசியம் மறவாதே

பப்பளப் பள பட்டுகளா
அங்கு பறந்து போற சிட்டுகளா
பளிங்கை போல குலுக்கி நெலுக்கி
பவுசை காட்டும் பெண்டுகளா
நம்பவே நம்பாதீங்க
நம்பி மோசம் போகாதீங்க


பக்கா படிக்கு முக்கா படியை அளக்குறான்
ஆமாம் குலாமு
அந்த பாழாப் போறவன் நம்மளை கண்டு முறைக்கிறான்
ஆமாம் குல்சாரு
கண்ணில்லாத கபோதியை ஏய்க்கிறான்
ஆமாம் குலாமு
அந்த கட்டையிலே போறவன் துட்டையும் கொஞ்சம் நகத்துறான்
ஆமாம் குல்சாரு

ஊரை வளைச்சி உலையில் போட்டு
பிழைக்குது ஒரு கூட்டம்
உழைச்சவனை ஏய்ச்சு ஏய்ச்சு
உப்புது ஒரு கூட்டம்

இங்க எல்லாத்துக்கும் இடம் கொடுக்கிற அல்லாவே
நீயும் ஏமாந்திட்டா போட்டிடுவான் குல்லாவே

ஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு
ஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு
குலாமு குல்சாரு
குலாமு குல்சாரு
குலாம் குல்சார்
குலாம் குல்சார்