Friday, November 12, 2010

நான் ஏழு வயசுலே..

இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
(இளநீ .....)

தேங்காயிலே பாலிருக்கும்
அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
இளசானா தண்ணி இருக்கும்
முத்திப் போனா என்ன இருக்கும்
உப்பு கரிக்கும்
மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
(நான் ஏழு வயசிலே ...)

இளனியிலே பலனிருக்கு
அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
இது தானே புது சரக்கு இங்கு
மத்தது எல்லாம் கடை சரக்கு
வெயில் நேரம் வேலை ஏறும்
வெலை ஏற சுவை ஏறும்
சூப்பி குடிச்சா
உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
இளநீ இளநீ இளநீ ...

தென்னை மரமும் பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
தென்னம் பாளையும் பொண்ண போல தான்
அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் செவக்கும்
(நான் ஏழு வயசிலே )

இளநீ இளநீ இளநீ

Tuesday, November 2, 2010

இது நாட்டை காக்கும் கை

இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை
(இது நாட்டை ..)

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
(இது நாட்டை ..)

உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை
(இது நாட்டை... )