Tuesday, December 30, 2008

பெண்களாலே உலகிலே ...

பெண்களாலே உலகிலே
பெருமை காணும்
இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே
பெண்களாலே உலகிலே

கல்லா மூட கணவனும் வாழ
வாழ்வினில்
இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள்
(பெண்களாலே உலகிலே )

குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும்
குலமது ஓங்கிட வழி தேடுவாள்
(பெண்களாலே உலகிலே )

மலை போல துன்பம் நேர்ந்த போதும்
வண்ண
மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள்
(பெண்களாலே உலகிலே )

உன்னை அழைத்தது யாரோ ...

உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே
(உன்னை அழைத்தது யாரோ )

வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே
(உன்னை அழைத்தது யாரோ )

பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திட்ட வேளையிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே
(உன்னை அழைத்தது யாரோ )