Monday, May 26, 2008

போய் வா நதியலையே ..

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா (2)
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா (2)

கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்
நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
இது போதும் என்று தடுமாறி
இடம்மாறி மாறி சுகம் தேடி
ஆ ..உறவாடும் போது சரிபாதி ஆகி
உயிர் காணும் இன்பம் பல கோடி

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா (2)

நுரை பூவை அள்ளி அலைசிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்
வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்
மெதுவாக வந்து இதழ் மோதி
பதமாக அன்பு நதியோடி
ஒ ..மண மேடை கண்டு புது மாலை சூடி
குல மங்கை வாழ நலம் பாடி

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா

5 comments:

மதிவாணன் காந்தி said...

படைப்பாளியை குறிப்பிடுங்கள். அதுதான் நீதி. பாடலாசிரியர் நா. காமராசன்.

பூங்குழலி said...

என் வலைத்தளத்தின் நோக்கம் எம்ஜிஆர் பாடல்களை ஒரே தளத்தில் சேர்ப்பது மட்டுமே.பிற தகவல்கள் எல்லாம் நேரம் கிட்டும் போது சேர்ப்பேன்

பூங்குழலி said...

என் வலைத்தளத்தின் நோக்கம் எம்ஜிஆர் பாடல்களை ஒரே தளத்தில் சேர்ப்பது மட்டுமே.பிற தகவல்கள் எல்லாம் நேரம் கிட்டும் போது சேர்ப்பேன்

Dr.Ezhilvendan said...

அருமையான பணீயை அழகாகச் செய்திருக்கிறீர்கள். என் நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டுதல்களும் தெரிவித்துக் கொள்கிறேன் - கவிஞர் டாக்டர் எழிவேந்தன்

பூங்குழலி said...

மிக்க நன்றி கவிஞரே

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி