Thursday, November 12, 2009

நமது வெற்றியை நாளை ...

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Wednesday, November 11, 2009

முத்து போலே ....

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
(முத்து போலே )

கஷ்டம் தீர்ந்தது, உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை பெறும் வேளை வந்தது
(முத்து போலே)

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவில் வந்த செல்வமே
கண்ணை காக்கும் இமையைப் போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழ்வோமடா
(முத்து போலே )

Monday, October 12, 2009

ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும் ....

ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
(ஊர்வலமாக )

விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா

Wednesday, April 22, 2009

பாற்கடல் அலை மேலே

பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா -
உந்தன் பதமலர் நிதம் தேடி
பரவசமோடு பாடி கதி பெறவே
ஞானம் நீ தா தேவா


காதகனான ஒரு சோமுகன்
கை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்
பின்னர் மேதினி தான் மீள
பாதகன் தான் மாள
மீனவதாரம் செய்த திருமாலே


வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த
மந்தரகிரி தன்னை தாங்கிடவே -
ஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என
கோலமுற்றாய் புகழ் ஓங்கிடவே


ஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி
பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -
அவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே
நானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே


எங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற
ஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -
அந்த தூணில் இருப்பான் என்று
இயம்பியதால் நேர்ந்த தொல்லை
நீங்கவும் பொங்கு சினவம்பனர்கள்
பூத உடம்பும் தசை தின்ரெழுந்து
தோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே
நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே

ஷங்கு சக்ர தாரனே
உபகாரனே ஆதாரனே


மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே
க ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி
தந்தை ஆவியை பிரித்ததனால்
சூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே


தேவர்களை சிறை மீட்டு
ராவணாதி உயிர் மாய்த்த
தஷரத ஸ்ரீ ராம அவதாரனே
பூமி தனிலே புகழையும்
உழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே


ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா
கோபாலகிருஷ்ணனா ஆதிமூலா பரிபாலா


பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ரபேதகம் செய்த
அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரன்
சிங்காரன் தசாவதாரன் நீயே

Friday, April 3, 2009

யாருக்கு யார்

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

Thursday, April 2, 2009

அன்பே வா

அன்பே வா அன்பே வா வா
அன்பே வா அன்பே வா வா

உள்ளமென்றொரு கோவிலிலே
தெய்வம் கண்டேன்
அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் கண்டேன்
அன்பே வா

அன்பே வா வா
அன்பே வா வா

Tuesday, March 31, 2009

மாலை நேர தென்றல்

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

அணைத்தாலும் அடங்காததோ அது
போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ....விளங்காததோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

கண்மணி என் மனம் உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ ......
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ
ஆஆஆஆஆஆஆஆஅ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
அஹா அஹஹா அஹா ஆஹா ஹா அஹா


http://www.youtube.com/watch?v=0SeF9GXldqE&feature=related

Friday, March 27, 2009

ஊருக்கும் தெரியாது .....

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது

தில்லானா பாட்டு பாடி

தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
அய்யய்யோ ....
விழியாலே பலியாவார் வம்புக்காரா

தில்லானா ... தில்லானா ...
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

ஆ ..ஆ ..ஆ . ஆ ....
அந்த மாமுனிவரெல்லாம் அடங்கினார் ...
அந்த காலம் ...
ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ..ஏ ..ஏ ..ஏ ...
அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம் ...

தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
வாயளவில் பேசிடுவார் .... பிறகு
வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
வலிய வந்து காலில் விழுவார்

ஆ ..ஆ .ஆ .ஆ .ஆ ....
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா

அப்படியா ...
பின்னே எப்படியாம் ...

நீரில்லாத நிலமில்லே
நிலமில்லாத மரமில்லே
மரமில்லாத விதை இல்லே
விதை இல்லாத மரமில்லே
ஆணில்லாத பெண் இல்லே
பெண் இல்லாத ஆணில்லே

புரிஞ்சிதா ....
புரியுதே ...
புரியுதே புரியுதே ...

மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
மலையான எம்மனச குள்ள தாரா
அறிவு உளியாலே பேத்துட்டியே குள்ள தாரா
கல்லான ஆம்பிள்ளையும் வம்புக்காரா
கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா
கனியாலே பலியாவார் வம்புக்காரா

தில்லானா ... தில்லானா ...
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா

Thursday, March 26, 2009

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் ....

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு
டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி


தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

தக்காளி பழமே தள தள உடம்பில்
தக்காளி பழமே தள தள உடம்பில்
எக்காளம் ஏனடியோ ? உனக்கு இக்கோலம் ஏனடியோ ?
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ ?உனது முத்தாரம் நான் அடியோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி

ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ


கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
ல ல ல ல ல ...

Wednesday, March 4, 2009

பிள்ளை தமிழ் பாடுகிறேன்

பிள்ளை தமிழ் படுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
(பிள்ளை தமிழ் )

நீலக் கடல் அலை போல நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க
காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க
(பிள்ளை தமிழ் )

வான மழை துளியாவும் முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும் உன்போலே சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளி அழகும் உன் அழகைக் காட்டாது
(பிள்ளை தமிழ் )

Monday, March 2, 2009

இசை அமைப்பாளர்கள்

பைத்தியக்காரன் - சி. ஆர் .சுப்பாராமன் (சி.ஆர்.எஸ்.)
ராஜகுமாரி -எஸ்.எம்.சுப்பையா நாயுடு (எஸ்.எம்.எஸ் )
அபிமன்யு - சி.ஆர்.எஸ்/எஸ்.எம்.எஸ்
மோகினி -சி.ஆர்.எஸ்./எஸ்.எம்.எஸ்
ராஜமுக்தி -சி.என்.பாண்டுரங்கன்
ரத்னகுமார் - ஜி .ராமநாதன் (ஜி.ஆர் ) /சி.ஆர்.எஸ்
மந்திரிகுமாரி -ஜி .ஆர்
மருதநாட்டு இளவரசி -எம்.எஸ்.ஞானமணி
மர்மயோகி -எஸ்.எம்.எஸ் /சி.ஆர்.எஸ்
சர்வாதிகாரி -எஸ்.தட்சிணாமூர்த்தி


அந்தமான் கைதி -கோவிந்தாராஜுலு நாயுடு
என் தங்கை - .என்.பாண்டுரங்கன்
குமாரி -கே .வி.மகாதேவன்(கே.வி.எம் )
ஜெனோவா -எம்.எஸ்.விஸ்வநாதன்(எம்.எஸ்.வி )/எம்.எஸ்.ஞானமணி /டி.எ.கல்யாணம்
நாம் -சி.எஸ்.ஜெயராமன்
பணக்காரி -எஸ்.வி.வெங்கட்ராமன் (எஸ்.வி.வி )
கூண்டுக்கிளி -கே.வி.எம்
மலைக்கள்ளன் -எஸ்.எம்.எஸ்
குலேபகாவலி -விஸ்வநாதன்/ராமமூர்த்தி (வி.ஆர் )
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் -எஸ்.தட்சிணாமூர்த்தி


மதுரை வீரன் -ஜி.ஆர்
தாய்க்கு பின் தாரம் -கே.வி.எம்
சக்கரவர்த்தி திருமகள் -ஜி.ஆர்
மகாதேவி -வி.ஆர்
புதுமைப் பித்தன் -ஜி.ஆர்
ராஜராஜன் -கே.வி.எம்
நாடோடி மன்னன் -வி.ஆர்
தாய் மகளுக்கு கட்டிய தாலி -டி.ஆர்.பாப்பா
பாக்தாத் திருடன் -கோவிந்தாராஜுலு நாயுடு
மன்னாதி மன்னன் -வி.ஆர்


ராஜா தேசிங்கு -ஜி.ஆர்
அரசிளங்குமரி -ஜி.ஆர்
நல்லவன் வாழ்வான் -டி.ஆர்.பாப்பா
சபாஷ் மாப்பிள்ளை -கே.வி.எம்
தாய் சொல்லை தட்டாதே -கே.வி.எம்
திருடாதே -எஸ்.எம்.எஸ்
குடும்ப தலைவன் -கே.வி.எம்
மாடப்புறா -கே.வி.எம்
பாசம் -வி.ஆர்
ராணி சம்யுக்தா -கே.வி.எம்


தாயைக் காத்த தனயன் -கே.வி.எம்
விக்கிரமாதித்தன் -எஸ்.ராஜேஷ்வர ராவ்
ஆனந்த ஜோதி -வி.ஆர்
தர்மம் தலை காக்கும் -கே.வி.எம்
கலையரசி -கே.வி.எம்
காஞ்சி தலைவன் -கே.வி.எம்
கொடுத்து வைத்தவள் -கே.வி.எம்
நீதிக்கு பின் பாசம் -கே.வி.எம்
பணத்தோட்டம் -வி.ஆர்
பரிசு -கே.வி.எம்


பெரிய இடத்துப் பெண் -வி.ஆர்
தெய்வத்தாய் -வி.ஆர்
என் கடமை -வி.ஆர்
படகோட்டி -வி.ஆர்
பணக்கார குடும்பம் -வி.ஆர்
தாயின் மடியில் -எஸ்.எம்.எஸ்
தொழிலாளி -கே.வி.எம்
வேட்டைக்காரன் -கே.வி.எம்
ஆசை முகம் -எஸ்.எம்.எஸ்
ஆயிரத்தில் ஒருவன் -வி.ஆர்


எங்க வீட்டு பிள்ளை -வி.ஆர்
கலங்கரை விளக்கம் -எம்.எஸ்.வி
கன்னித்தாய் -கே.வி.எம்
பணம் படைத்தவன் -வி.ஆர்
தாழம்பூ -கே.வி.எம்
அன்பே வா -எம்.எஸ்.வி
நான் ஆணையிட்டால் -எம்.எஸ்.வி
முகராசி -கே.வி.எம்
நாடோடி -எம்.எஸ்.வி
சந்திரோதயம் -எம்.எஸ்.வி


பறக்கும் பாவை -எம்.எஸ்.வி
பெற்றால் தான் பிள்ளையா -எம்.எஸ்.வி
தாலி பாக்கியம் -கே.வி.எம்
தனிப்பிறவி -கே.வி.எம்
அரசகட்டளை -கே.வி.எம்
காவல்காரன்-எம்.எஸ்.வி
தாய்க்கு தலை மகன் -கே.வி.எம்
விவசாயி -கே.வி.எம்
ரகசிய போலீஸ் 115 -எம்.எஸ்.வி
தேர்த் திருவிழா-கே.வி.எம்


குடியிருந்த கோவில் -எம்.எஸ்.வி
கண்ணன் என் காதலன் -எம்.எஸ்.வி
புதிய பூமி-எம்.எஸ்.வி
கணவன்-எம்.எஸ்.வி
ஒளி விளக்கு -எம்.எஸ்.வி
காதல் வாகனம் -கே.வி.எம்
அடிமைப் பெண் -கே.வி.எம்
நம் நாடு -எம்.எஸ்.வி
மாட்டுக்கார வேலன் -எம்.எஸ்.வி
என் அண்ணன் -கே.வி.எம்


தலைவன் -எஸ் .எம்.எஸ்
தேடி வந்த மாப்பிள்ளை -எம்.எஸ்.வி
எங்கள் தங்கம்- எம்.எஸ்.வி
குமரிக் கோட்டம் -எம்.எஸ்.வி
ரிக் ஷாக்காரன்- எம்.எஸ்.வி
நீரும் நெருப்பும் -எம்.எஸ்.வி
ஒரு தாய் மக்கள் -எம்.எஸ்.வி
சங்கே முழங்கு -எம்.எஸ்.வி
நல்ல நேரம் -கே.வி.எம்
ராமன் தேடிய சீதை -எம் .எஸ்.வி


அன்னமிட்டகை -கே.வி.எம்
நான் ஏன் பிறந்தேன் -சங்கர் கணேஷ்
இதயவீணை -சங்கர் கணேஷ்
உலகம் சுற்றும் வாலிபன் -எம்.எஸ்.வி
பட்டிக்காட்டு பொன்னையா- எம்.எஸ்.வி
நேற்று இன்று நாளை -எம்.எஸ்.வி
உரிமைக்குரல் -எம்.எஸ்.வி
சிரித்து வாழ வேண்டும் -எம்.எஸ்.வி
நாளை நமதே -எம்.எஸ்.வி
பல்லாண்டு வாழ்க -கே.வி.எம்


இதயக்கனி-எம்.எஸ்.வி
நீதிக்கு தலை வணங்கு-எம்.எஸ்.வி
உழைக்கும் கரங்கள் -எம்.எஸ்.வி
ஊருக்கு உழைப்பவன்-எம்.எஸ்.வி
இன்று போல் என்றும் வாழ்க-எம்.எஸ்.வி
நவரத்தினம் -குன்னக்குடி வைத்தியநாதன்
மீனவ நண்பன் - எம்.எஸ்.வி
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -எம்.எஸ்.வி

Monday, January 5, 2009

அச்சு நிமிர்த்தவண்டி

பாராண்ட மன்னரெல்லாம் பணிந்திருந்த பூமியிலே
இந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா
ஆ ஆ ஆ
இந்த பச்சோந்தி கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா

அச்சு நிமிர்த்தவண்டி
ஆளை குடை சாய்க்கும் வண்டி
அஞ்சாத வண்டி இதுதாண்டி
என் தங்கமே தங்கம்
ஆளைப் பாரு பணக்காரண்டி
ஆமா சிங்கமே சிங்கம்
யாருக்கும் அஞ்சாத வண்டி
என் சிங்கமே சிங்கம்
யாருக்கும் அஞ்சாத வண்டி


ஆலாட்டம் போட்டுக்கிட்டு காளை போல துள்ளுறான்
அந்த வாலாட்டம் நம்ம கிட்ட வேண்டாம் ன்னு சொல்லிடுங்க


டபாச்சாரி வேலை பண்ணாதே
அட சிங்கமே சிங்கம்
டபாச்சாரி போலவே துள்ளாதே
போடு தங்கமே தங்கம்
டபாச்சாரி போலவே துள்ளாதே

அஞ்சாறு பெத்திருந்தா அரசனும் ஆண்டியடா
இதை அறியாதவரில்லே இங்கு பாரு
அபிவிருத்தி செய்யாதே
இதை அவசியம் மறவாதே

பப்பளப் பள பட்டுகளா
அங்கு பறந்து போற சிட்டுகளா
பளிங்கை போல குலுக்கி நெலுக்கி
பவுசை காட்டும் பெண்டுகளா
நம்பவே நம்பாதீங்க
நம்பி மோசம் போகாதீங்க


பக்கா படிக்கு முக்கா படியை அளக்குறான்
ஆமாம் குலாமு
அந்த பாழாப் போறவன் நம்மளை கண்டு முறைக்கிறான்
ஆமாம் குல்சாரு
கண்ணில்லாத கபோதியை ஏய்க்கிறான்
ஆமாம் குலாமு
அந்த கட்டையிலே போறவன் துட்டையும் கொஞ்சம் நகத்துறான்
ஆமாம் குல்சாரு

ஊரை வளைச்சி உலையில் போட்டு
பிழைக்குது ஒரு கூட்டம்
உழைச்சவனை ஏய்ச்சு ஏய்ச்சு
உப்புது ஒரு கூட்டம்

இங்க எல்லாத்துக்கும் இடம் கொடுக்கிற அல்லாவே
நீயும் ஏமாந்திட்டா போட்டிடுவான் குல்லாவே

ஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு
ஆமாம் குலாமு ஆமாம் குல்சாரு
குலாமு குல்சாரு
குலாமு குல்சாரு
குலாம் குல்சார்
குலாம் குல்சார்