தண்ணீர் எனும் கண்ணாடி,
தழுவுது முன்னாடிபெண்ணின் உடலும் பேதை மனமும்
துள்ளுது சுகத்தில்தள்ளாடி தள்ளாடி தள்ளாடி
(தண்ணீர்)
முழங்கால் தழுவும் குழலோடு
மூடிய குவளை விழியோடு
இனிக்கும் செவ்வாய் இதழோடு
ஏனிந்த மீனுக்கு விளையாட்டு ?
ஏனிந்த மீனுக்கு விளையாட்டு ?
(தண்ணீர்)
பள்ளிக்கூடம் பல சென்று
படித்த கதைகள் பல உண்டு
இன்பத் தேனில் நீராடும்
இந்தக் கலைகள் எதில் உண்டு ?
இந்தக் கலைகள் எதில் உண்டு ?
(தண்ணீர்)
குளிர்ந்த காற்று நடிக்குதம்மா
கூவும் குயிலும் துடிக்குதம்மா
மயிலுக்குப் போர்வை வேண்டுமென்று
மனதும் உடலும் கேட்குதம்மா
கேட்குதம்மா கேட்குதம்மா
(தண்ணீர்)
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி