உனது விழியில் எனது பார்வைஉலகைக் காண்பது -
உன்இதயம் எழுதும் உணர்வில்
எந்தன் கவிதை வாழ்வதுஎன்... கவிதை வாழ்வது
(உனது)
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள்
காராணம் கூறுவதோ -
உனைக்காண்பதென்ன சுகமோ..
உனைக்காண்பதென்ன சுகமோ
(உனது)
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என் உயிர் வாழ்கிறது -
அதுஎன்றும் வாழும் உறவு-
அதுஎன்றும் வாழும் உறவு
(உனது)
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி