அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை
Friday, May 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
குறுநகை காலத்து தாமரை
கோடைகாலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
மிக்க நன்றி வீராங்கன் உங்கள் திருத்தத்திற்கு ...விட்டு போன வரிகளை சேர்த்து விட்டேன்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி