Monday, May 26, 2008

என்னை விட்டால் யாருமில்லை ....

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின்  சிலைகளில் ஒன்று
வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
(என்னை விட்டால் )

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ
(என்னை விட்டால் )

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு
(என்னை விட்டால் )

4 comments:

Gnanamani Sigamani DTCP said...

அறுத்த மரத்தின் இலைகளில் ஒன்று என்பது "அழகர் மலையின் சிலைகளில் ஒன்று "என வரவேண்டும் அல்லவா ?

பூங்குழலி said...

நன்றி Gnanamani Sigamani .மாற்றிவிட்டேன் .திருத்தியதற்கு நன்றி

Unknown said...

ஆஹா .மிக்க நன்றி சகோதரி உங்கள் செயலுக்கு. யானையின் தந்தம் என்பது ஆனையின் தந்தம் எனவும் ,அழகர் கோவில் என்பது அழகர் மலையின் ..என அமைத்தாலே நலம் அல்லவா சகோதரி ?(அதேசமயம் உங்களின் உழைப்பைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை .வாழ்க வளமுடன் சிஸ் )

பூங்குழலி said...

மிக்க நன்றி சகோ .மாற்றிவிட்டேன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி