Wednesday, May 21, 2008

உன்னைத் தானே ....

உன்னைத்தானே.. ஏய்.. உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைதானே -
நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே
(உன்னை)


கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாடநேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போகத்தூது வரவில்லை
(உன்னை)


வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோடதூதுவேண்டுமா
இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல்சொந்தம் போகுமா
(உன்னை)


வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி
சொன்னது போதும் சன்னிதி தேடிதூது பேச வா
இன்னது காதல் என்பதைக் காணஎன்னை தேடி வா
(உன்னை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி