Thursday, August 28, 2008

சிரிப்பவர் சில பேர் ....

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே -

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ


இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா ....

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா -

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

பாடல் :மருதகாசி

இசை :கே.வி.மகாதேவன்

பாடியவர்:சீர்காழி கோவிந்தராஜன்

பெண்ணே என்று ..

பெண்ணே என்று சொல்லவா
கண்ணே என்று சொல்லவா
பால் போன்ற மனதினில் ஏக்கமா
பகலிலும் பொய்யான தூக்கமா
(பெண்ணே)


சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட
துள்ளும் கால்கள் சிறு நடை போட
மருண்டு நின்றாய் மானென விழித்தாய்
மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்
(பெண்ணே)


சின்ன இடையைக் கண்களில் அளப்பான்
சிவந்த இதழில் வண்டென குதிப்பான்
என்று நினைத்து ஏங்குகிறாயோ
ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ
(பெண்ணே)


தொட்ட சுகமே இத்தனை என்றால்
தொடரும் நாளில் எத்தனை வருமோ
சிட்டு விழியே சித்திர முகமே
வீரன் வருவான் பொறுத்திரு மனமே
(பெண்ணே)

பாய் விரித்தது ...

பாய் விரித்தது பருவம்
பள்ளி கொண்டது இளமை
குரல் கொடுத்தது சேவல்
விழித்துக் கொண்டன கண்கள்
(பாய்)


நிலவுமகள் நடை பயில்வதென்ன -
எந்தன்நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன -
ஒருஇடைவேளை இன்றி நடிப்பதென்ன
வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்
துணைக்கரம் இருந்தால் தொடச்சொல்லத் தோன்றும்
(பாய்)


வழிவழியாய் வந்த வழக்கப்படி -
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி
படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி -
கதைபடிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்
படித்ததை முடித்தால் பல நாள் இனிக்கும்
(பாய்)

நீராழி மண்டபத்தில் ....

நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்


வாடையிலே வாழை இலை குனியும் -
கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும் -
இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான் -
அவள்பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
( நீராழி)


தேனளந்தே இதழ் திறந்திருக்க -
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க -
வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேரளவில் இருவர் என்றிருக்க -
சுகம்பெருவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
கீழ்த்திசையில் கதிர் தோன்றும் வரை -
அங்குபொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை
( நீராழி)

பாடல் :வாலி

இசை :எஸ் .எம் .சுப்பையா நாயுடு

பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்

கண் பட்டது கொஞ்சம் ...

கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
(கண்)


அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -
அதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது
(கண்)


இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -
இல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா
(கண்)


நல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -
உடல்குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -
உன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
(கண்)

அன்னை இல்லாமல் ...

அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே
அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


ஓவியமோ இல்லை காவியமோ
கன்னியர் பெருமை சொல்லும்?
ஓவியமோ இல்லை காவியமோ
அது கன்னியர் பெருமை சொல்லும்?
இளமை என்ன முதுமை என்ன?
இளமை என்ன அந்த முதுமை என்ன?
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்
ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


காலையிலே மலர் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடி வரும்
காலையிலே மலர் சோலையிலே
வண்ணப் பறவைகள் பாடி வரும்
பாடலிலே தூது விட்டேன்
பாடலிலே ஒரு தூது விட்டேன்
அது காதலைத் தேடி வரும்
அது காதலைத் தேடி வரும்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே


நான் பூங்காற்றுஅவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நான் பூங்காற்றுஅவன் தேனருவி
இதை ஆண்டவன் எழுதி வைத்தான்
நாள் வரலாம் அன்று ஊர் அறியும்
ஒரு நாள் வரலாம் அன்று ஊர் அறியும்
என்று ஆசையை அடக்கி வைத்தேன்
என் ஆசையை அடக்கி வைத்தேன்


அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்
அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்
நாலும் தெரிந்தவள் பெண் தானே
அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே

Tuesday, August 26, 2008

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் ...

யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற
எங்கே ஓடுற
சொல்லு யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற
எங்கே ஓடுற சொல்லு
சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
காட்டுப்பூனை போல் முளிக்கிற
திருட்டு பெண்ணே
காசை கொட்டி நான் வாங்கி இருக்கிறேன்
கண்ணே
கன்னி பொண்ணு நீயே கட்டழகன் நானே
உன்னை இப்போ விட்டுவிடுவேனோ
சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற
எங்கே ஓடுற சொல்லு

இதுவரை .? இருக்கு எனக்கு அதுலே
சரி இடம் தருவேன் பீவி உனக்கு
அதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு
இது ரொம்ப சகஜம் எனக்கு
சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற
எங்கே ஓடுற சொல்லு

தாடிய பாத்து தயங்குது உனது மனசு
நாடிய தொட்டு பாருதெரியும் என் வயசு
ஓட எண்ணாதே மோடி பண்ணாத இருந்தா உனக்கு ?
சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்து நில்லு ...ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற
எங்கே ஓடுற சொல்லு

அத்தானும் நான் தானே........

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே..

என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே..

சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
பட்டாடை சம்சார சங்கீதமே ..

உனக்கு அத்தானும் ,
அருமை அத்தானும் ,
ஆசை அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே....
அத்தானும் நான் தானே

உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே
அத்தானும் நான் தானே........

எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே...

எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம்.....
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

மின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
மின்னலைப்போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே..
இன்று என்னுள்ளம் துள்ளி ஆடுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
ஆனந்தமாக வாழ்வேன்.. தோழி
ஆனந்தமாக வாழ்வேன்


எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புதுவசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே_________________

அநியாயம் இந்த ஆட்சியிலே ....

(பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே
நியாயமாய் வாழவும் வழி இல்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்)

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்


கனிவாக பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
இங்கு தடுக்கி விழுந்தா வரி,
குனிந்து நிமிர்ந்தா வரி
இட்டு வரி, பட்டி வரி, சட்டி வரி
இதைப்போல் ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகாவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகாவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத ஏழை மக்களும்
அடிமையாகிறார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புது புது வரிகளை
போடுவதெல்லாம் நியாயமில்லே
எதிர்த்து கேட்கவும் நாதியில்லே
அவங்க என்ன செய்தாலும் கேள்வியில்லே
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழ பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி..
இந்த நாட்டு வரி......

ராமனின் நாயகி .....

ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மன் ஓவியம்
பொன் மான் தேட சொல்லும் தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ
மங்கை உன்ன கைகளே மாலைகள் அல்லவோ
மை இடும் கண்களே தீபம்தான் சொல்லவோ

ராமனின் நாயகி கம்பனின் காவியம்

தீயிலிட்ட போதும் தங்கம் தந்கமல்லவோ
தேவனுக்கு சொந்தம் இந்த அம்மனல்லவோ
வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மை அல்லவா
வைதேகி பூவை மிஞ்சும் மென்மை அல்லவா
கற்பிலும் பண்பிலும் சீதைப்போல் பாவை நான்
அன்பிலும் பண்பிலும் ராமன்போல் மன்னன் நான்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

ஏன் உள்ளம் உந்தன் ஆராதனை ....

என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

சுகம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
வெட்‌கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே


தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே

தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

சம்மதமா ...

சம்மதமா…..சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

வெகு தூரம் தனியே போவதபாயம்
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்
தகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம்
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே
நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
மீறி பசி வந்தாலும் பறவைபோலே
பகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம்

சம்மதமா
இப்போ சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

பொன்மனச்செம்மலை .....

பொன் மனச்செம்மலை புண்பட செய்தது
யாரோ அது யாரோ
பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
உன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ
அறிவாரோ
பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
உன் மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ
அறிவாரோ

உன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட
வண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட
உன்னை ஒரு சேய்போல் நான் தாலாட்ட
வண்ண சிறு செவ்வாயில் தேனூட்ட
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
விலகாமல் நாம் விளையாடலாம்

மன்னவன் என்னை புண் பட செய்தது
கண்ணே உந்தன் கண்ணே
கன்னத்து முத்ததில் காயங்கள் ஆறிடும் பெண்ணே
செம் பொன்னே

தோகை மணிதேர்போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
தோகை மணிதேர்போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
சுகமான நிலை தோன்றுமோ
மறவாத நினைவாகுமோ
சரிபாதி நான் பரிமாறலாம்

பொன் மனச்செம்மலை புண் பட செய்தது
யாரோ அது யாரோ
மன்னவன் என்னை புண் பட செய்தது
கண்ணே உந்தன் கண்ணே

மயங்கும் வயது ...

மயங்கும் வயது மடிமேல் விழுந்து
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து

ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க

மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முதலில் தயக்கம் முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்

மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து

மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாரினில் வந்து மயங்கி விழும்
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழசாரினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதயில் தன்னை மறந்திருக்கும்
உண்டு போனதும் இன்னும் மிச்சம் சுவை இருக்கும்

ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆமாமா என்னென்ன நடந்திருக்கும்
நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்


இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு

முகத்தை பார்த்ததில்லை ....

முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்
அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்
மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்

முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


மயக்கம் கலையும்
மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்
களைப்பும் தோன்றும்
கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்

Monday, August 25, 2008

என்ன பொருத்தமடி .....

என்ன பொருத்தமடி மாமா
ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா பிரேமா ஹேமா
என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா
ஆமாமா ஆமாமா மாமா

பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்த கொதிப்போ
மன்னவன் சிந்திடும் புன்னகை கள்ளச்சிரிப்போ
இந்திரன் சந்திரன் மன்மதன் என்னும் நினைப்போ
என்ன பொருத்தமடி மாமா ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா


கோபுரம் மீதினில் தாவிடும் வானரம்தான் இவன்தான்
பூவையின் பூ விழி பார்த்ததும் பைத்தியம் ஆனவனோ
பாலும் பழமும் வெறுப்பானோ
பள்ளி கொள்ளாமல் தவித்தானோ
தலையணை துணையாய் கொண்டானோ
கற்பனை சுகத்தை கண்டானோ


உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..
பாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி
பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம்
போகசொல்லடி வனவாசம்
என்ன பொருத்தமடி மாமா ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா

தாயகத்தின் சுதந்திரமே ....

தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

என்னைப் பார்த்து ...

என்னைப் பார்த்து
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்


உன்னை பார்த்து
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்

ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
என்னைப் பார்த்து ....

மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் மனதை பெற வேண்டும்
கன்னியின் மனதை பெற வேண்டும்

உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

செக்கச்சிவந்த கன்னமிரண்டு
சக்கரையோ இல்லை கற்கண்டோ
சக்கரையோ இல்லை கற்கண்டோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ இல்லை காவலனோ
பாவலனோ இல்லை காவலனோ

என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
எதுவும் நானாகும் !
எதுவும் தேனாகும்

மாட்டிகிட்டாரடி மயிலைக்காளை ....

மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு
வீரத்தை எங்க கிட்டே காட்டினாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


ராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா
ராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா
ஆண்மகன் ஆனால் எண்ண அல்லியின் கை கூஜா
அய்யா கிட்டே கேளடியம்மா
பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளகிட்டே வம்பு வளப்பாரா
கன்னியரின் கையில் வந்து சிக்கிக்கொண்டாரு
கரையேற வழியில்லாமல் சிந்திக்கின்றாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


மாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு
மாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு
மாண விரிச்ச வலையில் வந்து நேராய் விழுந்தாரு
ஹையோ பாவம் அழப்போராரு கிண்டல் வேணாண்டி
அறியாப்பிள்ளை அசடா இருந்தா விட்டு பிடிப்போம்டி
புத்தியில் ஏதோ கொஞ்சம் குற்றம் இருக்குதடி
பித்தங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் இருக்குதடி
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி

மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
வாலாட்ட வந்தவருக்கு விவரம் புரியாதா
ஒன்னா சேர்ந்து கண்ணாம்மூச்சி ஆடம் போட்டோன்டி
அனுதாபத்தில் தோற்றவருக்கு கூட்டம் போட்டோன்டி
பட்டவரை போதும் என்று விட்டா போவாரு
பெண் என்றால் அச்சம் கொண்டு சிட்டா பறப்பாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி

உள்ளம் ரெண்டும் ஒன்று ...

உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)
உயிரோவியமே... கண்ணே
நீயும் நானும் ஒன்று (2)
உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே...
ஆஆஅ...ஆஆஆஆ...ஆஆஆ...
காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே...
கண்ணா அனுராகத்திலே
கனிந்தே மகிழ்வோமே...(2)
அன்பே அனுராகம்...
அது தானே வாழ்வின் யோகம்
ஆஆஆ...ஆஆஆஅ..ஆஆஆஆஅ...
அன்பே அனுராகம்...
அது தானே வாழ்வின் யோகம்

அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நான்
வானில் மேவும் நிலவோ
கிள்ளை காத்து ஏங்கும் இலவோ (வானில்)
வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே (2)

உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)

இப்படியே இருந்துவிட்டால் ...

இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்

முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும் இருளாகும்… இருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்

இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்

விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
கண் அல்லவா ஆஆ ஆஆ

இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்

சரம் சரமாக மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில் முத்தாகும்… முத்தாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்

இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்

குருவிக்கார மச்சானே ...

குருவிக்கார மச்சானே யே யே யே யே யோவ்…
குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே
குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே

கோழி கூவும் வரயிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரயிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே


குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ யீ
குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி


ஊசி கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசி கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே


குருவிக்காரன் பொஞ்சாதி ஹேய்ய்ய்
நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஏ ஈ ஈயீ

திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
நீ திருடானாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுக்குள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்போ புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச
ஒஃ சாமீஈஈ.. ஓ சாமீ
சும்மா கிடந்த ஒடம்புகுள்ளே சூடு பொறந்ததென்ன
செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன

குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே

இன்னாத்த தான் கேக்குரேன்னு சொன்னாத்தான தெரியும்
எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்
காவி பல்லை காட்டி காட்டி காவியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

குருவிக்கார மச்சானே யே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே

காதலிக்காதே ...

காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே

மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மற்றவர் எல்லாம் வண்டுகள் கூட்டம்
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே

அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
திங்களையோ தென்றலையோ தூது விட்டாளா
அவள் பெண்ணை தவிர யாரையுமே பேசவிட்டாளா
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே

மான் விழியாள் சகுந்தலையாள் மன்னனை கண்டாள்
பாவம்…பாவம் ..பாவம்…
தேன் மொழியாள் அவன் கொடுத்த மோதிரம் கொண்டாள்
பாவம்…பாவம் ..பாவம்…
எத்தனையோ எண்ணங்களை எடுத்து வந்தாளே
மன்னன் இதய வாசல் கதவை மூடி தடுத்துவிட்டானே
காதலித்தாளே கவலை பட்டாளே
ஆசை வைத்தாளே அவதி பட்டாளே

ஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி
காட்சி…காட்சி..காட்சி
ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி
கெஞ்சிடுவார் கொஞ்சிடுவார் இரக்கப்படாதே
இதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே

இரவுகளை பார்த்ததுண்டு ...

இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை


செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்
உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்
அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
ஆஹா ஹ லாலா ரரர இம்ம்ம்ம்ம்
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை


கண் படும்போது கதைகளை கேட்டேன்
கை படும்போது கலைகளை பார்த்தேன்
கண் படும்போது கதைகளை கேட்டேன்
கைபடும்போது கலைகளை பார்த்தேன்
மனதிலிருந்து மடியினில் விழுந்தால்
சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
ஆராரோ அறிவோமே தீராதோ தெரியோமே
இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை

சித்தாடை கட்டி இருக்கும் ....

சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
சிங்கார கையால் என்னை கட்டு


இது காதல் நாடக மேடை
விழி காட்டுது ஆயிரம் ஜாடை
இது காதல் நாடக மேடை
விழி காட்டுது ஆயிரம் ஜாடை
இங்கு ஆடலுண்டு இன்ப பாடலுண்டு
சின்ன ஊடலுண்டு பின்னர் கூடலுண்டு
சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு

மது உண்டால் போதையை கொடுக்கும்
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
மது உண்டால் போதையை கொடுக்கும்
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
தன்னை தான் மறக்கும்
அது போர் தொடுக்கும்
இன்ப நோய் கொடுக்கும்
பின்பு ஓய்வெடுக்கும்
சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சிங்கார கையால் என்னை கட்டு

இங்கு தரவா நான் ஒரு பரிசு
அதை பெறவே தூண்டுது மனசு
இங்கு தரவா நான் ஒரு பரிசு
அதை பெறவே தூண்டுது மனசு
ஒண்ணு நான் கொடுத்தால்
என்ன நீ கொடுப்பாய்
உண்ண தேன் கொடுப்பேன்
என்னை நான் கொடுப்பேன்
சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
தந்தான தான

ஆடுவது உடலுக்கு விளையாட்டு ...

ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்

மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஜாடையோ தித்திக்க தித்திக்க
திட்டங்கள் போதாதோ
(ஆடுவது உடலுக்கு விளையாட்டு)

ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக
பஞ்சாங்கம் பார்ப்பாரோ
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
போட்டியில் நேருக்கு நேராக
யார் இங்கு வருவாரோ
(ஆடுவது உடலுக்கு விளையாட்டு )

நேத்து பூத்தாளே ....

நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
உன்ன பூவா நெனப்பேன்
நெனச்சு கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
இந்த காதல் கணக்கு
நமக்கு கண்ணில் இருக்கு
காலம் எதுக்கு ஒதுங்க நேரம் ஒதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு
நித்தம் வருவாளோ அல்வா துண்டு
இந்த மாமன் மயக்கம்
விடிஞ்சா தீரும் வரைக்கும்
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்கக் கூடாதோ லேசா தொட்டு

Friday, August 22, 2008

கன்னி ஒருத்தி மடியில் ....

கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
கன்னி ஒருத்தி ஒருத்தி மடியில்
காளை காளை காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்


காலைப்பொழுதும் விடிய
காதல் முழுதும் முடிய
சுவை சுவையாய் அள்ளி தந்தாள்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
இதழ்களை இதழ் கொண்டு மறைத்தாளோ
ஈரெட்டு வயதினில் மலர்ந்தாளோ
தேனருவி சாரென நினைத்தானோ
தொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ
கடலினில் படகென மிதந்தானோ
காலத்தை காதலில் மறந்தானோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
மணிவிழி மயங்கிட கிடந்தானோ
மேனியை கைகொண்டு அளந்தானோ
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
கலைகளை பழகிட துணிந்தானோ
காவிய பூமகள் துவண்டாளோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

கண் கவரும் சிலையே ...

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

பகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்.
பகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்
முகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன்
பேய் தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்...
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

படிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
படிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம்
தொடர்கதைபோல் தருவாய்
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

உள்ளம் ஒரு கோவில் ...

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்,
கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
புது நாயகனாய் நீ வந்தாயே
செவ்விதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே

தோள்களில் கொடியாய் தவழ்ந்திருப்பேன்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகல் இரவாய் நான் படைத்துவைப்பேன்

முன்னழகோடு பின்னழகும்
என் மனச்சிமிழில் நான் அடைத்துவைப்பேன்
ஆனந்த கடலின் அலையாவேன்
உன்னை ஆனி பொன்னுடல் சிலை என்பேன்
உள்ளம் ஒரு கோவில்

Tuesday, August 19, 2008

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு...

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி
பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு
பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

கண்ணாலே பேசும் பெண்ணாலே...

கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே

கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
அலை மேல் சேரும் புயல் போல் மாறி
நிலையே மாறும் மனம் போலே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே

மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே

கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே

மானும் ஓடி வரலாம்

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா

நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

காவிரித் தாயே .. ..

தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
ஆவியில் கலந்தவரை ஏன் பிரித்தாயோ?
அழகினிலே மயங்கி நீ மறைத்தாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
கரை புரண்தோடுகிறாய் மணமுருகாதோ?
என் கண்ணீரும் சேர்ந்து விட்டால் கரை உடையாதோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கைம்மையிலே என்னைக் கலங்க வைப்பாயோ?
கருணை மனமிரங்கி வாழ வைப்பாயோ?
காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே

கள்வர்கள் கன்னமிட்டால் உன்னிடம் சொல்வோம்
காப்பவள் கன்னமிட்டால் யாரிடம் சொல்வோம்?
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அங்கமெல்லாம் தளர்ந்து பதறுகின்றேனே
அன்பரைத் தந்து என்னை வாழ வைப்பாயே


மணி முடி தழைக்க வந்த மன்னவன் எங்கே?
மனையறம் காக்க வந்த மன்னவன் எங்கே?
கொள்கையிலே வளர்ந்த கொற்றவன் எங்கே?
எங்கே ..எங்கே .. எங்கே .. எங்கே .

கண்ணாளன் வருவார் ....


கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஓஓஓஓஓ....ஹுஹுஹூ..ஓஓஓ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே
கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஓஓஓஓஓ..ஹுஹுஹூ..ஓஓஓ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே
ஓஹோஹோஹோஹோஹோ
ஓஹோஹோஹோஹோஹோ

என் ராஜா என் ராஜா ! வருவாரே வருவாரே !
ஓஹோஹோஹோ...
ஓஹோஹோஹோ...
ஓஹோஹோஹோஹோ..
ஓஹோஹோஹோஹோ..
ராஜன் வருவாரே ராஜன் வருவாரே !
பேசி மகிழ்வேனே பேசி மகிழ்வேனே !
என் காதல் நாதன் இன்ப தேவன் வாழ்வின் ஜீவன்
என் காதல் நாதன் இன்ப தேவன் வாழ்வின் ஜீவன்....

என்னைதேடி விரைவினிலே ஜெயத்துடனே
என் ராஜன் வருவாரே
என்னைதேடி விரைவினிலே ஜெயத்துடனே
என் ராஜன் வருவாரே
என் ராஜா என் ராஜா ! வருவாரே வருவாரே !
ராஜன் வருவாரே ராஜன் வருவாரே !
பேசி மகிழ்வேனே பேசி மகிழ்வேனே !
கலந்து உறவாடும் கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கலந்து உறவாடும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல் கலந்தே
நாம் மகிழ்ந்தே வாழ்வோமே
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல் கலந்தே
மனம் மகிழ்ந்தே வாழ்வோமே
வாழ்வோமே வாழ்வோமே வாழ்வோமே !

செந்தமிழா எழுந்து வாராயோ...

செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ (செந்தமிழா)

சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ? (செந்தமிழா)

அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட (செந்தமிழா)

கலையோடு கலந்தது உண்மை ..

கலையோடு கலந்தது உண்மை
நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த
என் தமிழாளும் பெண்மை (கலை)

அழியாத நீதி நெறி விளையாடும் காட்சி
நிலையான சோழ மன்னன் எழில் மேவும் ஆட்சி
ஆடல் கணிகை பெற்ற மணிமேகலை
தனைத் தேடித் திரிந்த ஒரு சோழன் பிள்ளை
நாடும் வழி மறந்து தவறு செய்தான்
நகரத்து மாந்தர் கையில் உயிர் துறந்தான்

வெற்றி சேனையின் கொற்றக் காவலன்
வீணர்கள் பாதையை நாடுவதோ?
மான மனிதர் வாழும் உலகில்
மங்கை உலகம் பொங்கி அழுது வாடுவதோ?
கதி மாறி வழி மாறி விளையாடும்
சதிகாரர் வாழ்வு நிலையாகுமோ?


பற்றிப் பெருகும் கற்புக் கனலில்
அரசர் யாவரும் அழிவதே அறமோ?
கருவூரை வளைத்து அடியோடு எரிக்கும்
காலம் அறியும் விதியிலையோ? (கலை)

காதல் பலி ஆகி நீயும்.....

காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
காண்பவர் யாருமே கண்களின் கீதமே
உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய்


தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே
தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய்
தேசம்தன்னையே பாதுகாக்கவே
தேசம் தன்னையே பாதுகாக்கவே
நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய்


நாட்டுக்கே பாடம் தந்து போதிக்கும் தியாக சின்னம்
நாளும் உன் கல்லறை மீதில் நாங்களும்
கண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய்
மலர்கள் தூவியே மானசீகமாய்
அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே

காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்

சிங்காரப் புன்னகை கண்ணாரக் ....

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஆஆஆஆஆஆஆ

செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

அன்பினாலே ஆள வந்த ...

ஓ....... உள்ளத்தை
கண்டதால் உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்

அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள...........

சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள ............


இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினாலே இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள .........

Monday, August 18, 2008

சின்னஞ் சிறு வயது முதல் ....

சின்னஞ்சிறு வயது முதல்
சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனி ஒரு பிரிவும் உண்டோ
இன்பம் பெற தடையும் உண்டோ (சின்னஞ்சிறு)

கன்னி உந்தன் மழலையிலே
கற்பனைக்கும் வடிவு கண்டேன்
கண்டதொரு வடிவமெல்லாம்
காதலரின் உடமையன்றோ (சின்னஞ்சிறு)

காதலென்னும் உலகினிலே
பேசும் மொழி புதுமையன்றோ
கன்னியரின் மழலைஎல்லாம்
செந்தமிழின் இனிமையன்றோ (சின்னஞ்சிறு)

பால் மணக்கும் மேடையிலே
பூ முடித்து மணம் பெறுவோம்
தேன் மணக்க சேர்நதிடிவோம்
செந்தமிழில் பாடிடுவோம் (சின்னஞ்சிறு)

ராஜாத்தி காத்திருந்தா....

ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா
மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

சின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா
சின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

ஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா
ஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே
நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி !
ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால் ..

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?

தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

தாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால்
வேறொரு தெய்வ‌மில்லை வேறொரு தெய்வ‌மில்லை
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ப‌த்துமாத‌ம் பொறுமை வ‌ள‌ர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள் பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

அன்பில் ம‌ல‌ரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு அலையும்
ம‌ன‌தை அமைதியில் வைப்ப‌து
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை
ஏழை பார்த்த‌தில்லை
க‌ண்ணே க‌ண்ணே க‌ண்ணே
என்று கொஞ்சிய‌ வார்த்தை
காதில் கேட்ட‌தில்லை காதில் கேட்ட‌தில்லை
காதில் கேட்ட‌தில்லை !

கள்ளிருக்கும் ரோஜாமலர் ...

கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்

வானத்திலே வெள்ளி நிலா
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
காதலுக்கு வெட்கமில்லை
கண்ணிருந்தும் தூக்கமில்லை
கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்


நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பால்வடியும் உனது முகம் பாடுபடும் எனது மனம்
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு

இன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம்
எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
தென்றலுக்கு ஓய்வுமில்லை சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை
ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி
இன்ப சுகம் கோடி ஓய்ய் ஓய்ய் ஓய்ய்


கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு !

ஆடிவரும் ஆடகப் ...

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

செந்தமிழ்கே சொந்தம் எது ?
சிந்துபாட்டு ...சிந்துபாட்டு
தென்பொதிகை தந்ததெது
தென்றல் காற்று ..தென்றல் காற்று
எந்தனுக்கே சொந்தம் எது ?
...ம்ம்ம்ம்..ம்ம் சொல்லு
எந்தனுக்கே சொந்தம் ..இந்த இன்ப ஊற்று
இங்கின்றிதமாய் இதழால் விளையாட்டு
இங்கின்றிதமாய் இசையால் விளையாட்டு
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
ஆஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ.
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
என்ன தடை சொல்லடி
என்ன‌ சின்னக் கிளியே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
ஆ..ஆஆஆ..ஆஆஆஆஆ..
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
நீ ஏழையில்லை
பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை
நீ ஏழையில்லை
செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை
நீ ஏழையில்லை
இந்த‌ சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை !


ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ !

நிலவோடு வான் முகில் ....

நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் ........

எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் ...........

புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே தன் இதழ் மூடுமா

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
நிலவோடு வான் முகில் ..............
நிலவோடு வான் முகில் ..............

சரியா தப்பா ...

கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா ?
கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா

நெஞ்சை பறிகொடுத்துவிட்டு நினைவு தடுமாறி நின்று
தஞ்சம் நீ ! என்றதெல்லாம் சரியா தப்பா
நெஞ்சை பறிகொடுத்துவிட்டு நினைவு தடுமாறி நின்று
தஞ்சம் நீ ! என்றதெல்லாம் சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?

தின்னப் பழம் கிட்டாமல் சீ ! புளிக்கும் என்று
நரி சொன்ன கதை ஆனதெல்லாம் சரியா தப்பா
தின்னப் பழம் கிட்டாமல் சீ ! புளிக்கும் என்று
நரி சொன்ன கதை ஆனதெல்லாம் சரியா தப்பா
பழம் புளிக்கவில்லை உங்கள் மனம் புளிச்சு போச்சு என்றால்
போ வெளியே ! என்ற‌தெல்லாம் சரியா தப்பா
பழம் புளிக்கவில்லை உங்கள் மனம் புளிச்சு போச்சு என்றால்
போ வெளியே ! என்ற‌தெல்லாம் சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?

காதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றம்‍ ‍-
ஆனால் கடன்காரன் என்ற குற்றம் சரியா தப்பா
காதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றம்‍ ‍-
ஆனால் கடன்காரன் என்ற குற்றம் சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்றம் -
ஆனால் காதல் வேண்டாம் என்ற குற்றம் சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்றம் -
ஆனால் காதல் வேண்டாம் என்ற குற்றம் சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?

இன்பம் எங்கே என்று கேட்டு கையை ஏந்தி
காத்து நின்றால்
துன்பம் இதோ என்று காட்டல் சரியா தப்பா
இன்பம் எங்கே என்று கேட்டு கையை ஏந்தி
காத்து நின்றால்
துன்பம் இதோ என்று காட்டல் சரியா தப்பா
அன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லா காதல் கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது சரியா தப்பா
அன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லா காதல் கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?

மண்ணும் பொன்னும் போன பெண்ணும்
மாயை என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை கொள்ளல் சரியா தப்பா
மண்ணும் பொன்னும் போன பெண்ணும்
மாயை என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை கொள்ளல் சரியா தப்பா
அறம் பொருள் இன்பம் மூன்றும்
அவையப் பேரின்பம் என்றும்
வள்ளுவன் வகுத்த வழி சரியா தப்பா
அறம் பொருள் இன்பம் மூன்றும்
அவையப் பேரின்பம் என்றும்
வள்ளுவன் வகுத்த வழி சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?

காதல் காதல் காதல் போனால்
சாதல் சாதல் சாதல் என்று சொன்ன‌
கவியின் வார்த்தை கடை பிடித்தல் சரியா தப்பா
காதல் காதல் காதல் போனால்
சாதல் சாதல் சாதல் என்று சொன்ன‌
கவியின் வார்த்தை கடை பிடித்தல் சரியா தப்பா


கவலையில்லை காதல் செத்தால்
கட்டழகி இன்னொருத்தி கழுத்தில்
மாலை சூட்டுவது சரியா தப்பா
கவலையில்லை காதல் செத்தால்
கட்டழகி இன்னொருத்தி கழுத்தில்
மாலை சூட்டுவது சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ???

Monday, August 4, 2008

உழைப்பதிலா .....

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
அரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

மாயவலையில் ....

மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி

ஆணாய் பிறந்துலகில் மானாபிமானம் இன்றி
வாழ்பவர் பெரும்பாவி
மண்மேல் வாழ்பவர் பெரும்பாவி

வேதாந்தமே பேசும் வீண் புலமை தன்னை
ஈன்றவர் பெரும் பாவி
ஈன்றவர் பெரும்பாவி

ஆடி வா ...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை

ஆடி வா
ஆடி வா
ஆடி வா

ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா

இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
(ஆடி வா )

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
(ஆடி வா )

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
(ஆடி வா )