Wednesday, May 21, 2008

துள்ளி ஓடும் கால்கள் ...

துள்ளி ஓடிடும் கால்களேங்கே
தூண்டில் போடும் கண்களெங்கே
கள்ளப் பார்வை போனதெங்கே
கன்னிச் செல்வமே .. ஓ...
(துள்ளி)


மாலையிட தேதி சொன்னார்
மஞ்சளுக்கு தூது சொன்னார்
பாலருந்த நாள் குறித்தார்
பஞ்சணையை விரித்து வைத்தார்


கண்ணிருந்தும் பார்வையில்லை
காலிருந்தும் ஓட்டம் இல்லை
கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை
காதல் தெய்வமே... ஓ...


தாமரையில் தேனெடுத்து
சாறெடுத்து நெய்யெடுத்துத்
தங்கமென்ற உடலெடுத்து
கண்களுக்கு விருந்து வைத்தார்
(தாமரையில்)


ஆ....ஆ...உன்னடிமை ஆன பின்பு
என் உடைமை ஏது இங்கு
மன்னன் உந்தன் மலரடியில்
கண்ணிரண்டை சாத்தி வைத்தேன்
நாளுமில்லை பொழுதுமில்லை
நன்மை இல்லை தீமை இல்லை
வாழ்வதென்று இணைந்து விட்டோம்
வஞ்சமின்றி வாழ்ந்திருப்போம்ஆ...ஆ...ஆ...
( நாளும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி