Wednesday, May 21, 2008

உன்னை நான் சந்தித்தேன் ...


உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
(உன்னை)


பொன்னைத்தான் உடல் என்பேன் -
சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் -
தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
(உன்னை)


எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் -
கொண்டநாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
(உன்னை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி