Wednesday, May 21, 2008

தொட்டு விட தொட்டு விட ...

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..
(தொட்டு)


கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்
(தொட்டு)


அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்
(தொட்டு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி