தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு
(தேன்)
தத்தித் தத்திச் செல்லும் தவளைகள் உன்னை
தங்கை போல் நினைக்கட்டுமே
தாமரை இல்லா குளத்தினில்
உன் முகம்தாமரை ஆகட்டுமே
(தேன்)
சின்னச் சின்னத் தோணி தவழ்வது போல
கன்னி உடல் மிதக்கட்டுமே
திருமகள் கொண்ட மருமகள் போலே
ராஜாங்கம் நடக்கட்டுமே
(தேன்)
கட்டவிழ்ந்த கூந்தல் வெட்டிவேர் போலே
தண்ணீரில் நனையட்டுமே
கூந்தலின் வாசம் காற்றினில் ஏறி
நாடெங்கும் மணக்கட்டுமே
(தேன்)
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி