தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது -
அதுதாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது
(தூவானம்)
பூவாடும் இளம் கூந்தலுக்குள்புகுந்து புகுந்து ஓடுது
மேலாடைதனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது
மானோடும் சிறுவிழியில் இட்டமையும் கரைந்து ஓடுது
தேனோடும் இதழ் மீது வந்து
பனித்துளி போல் தேங்குது
(தூவானம்)
உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது
ஓட்டம் என்ன முன்னாலே
என் பக்கா மனசை இந்த வெட்கமும் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே
தக்க நேரம் வந்து விட்டது
தையல் போடு கண்ணாலே
இந்த சரசமாடக் கூடாது
ஒருதாலி கட்டும் முன்னாலே
(தூவானம்)
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி