Saturday, May 31, 2008

ஒருவன் மனது ....

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

பாடல் :கண்ணதாசன்

இசை :கே.வி.மகாதேவன்

பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்

ஒரு பெண்ணைப் பார்த்து ...


ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை(2) ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள்
தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
............ஒரு பெண்ணைப் .............

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்...
தன்னோடு என்னை சேர்த்தாள் (2)
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ





மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

புத்தன் ,இயேசு .....

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

Friday, May 30, 2008

ஏமாற்றாதே ...

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

உன்னைப் பார்த்து .....

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்


தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

ஏன் என்ற கேள்வி ..




ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருப்பது ?

ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
சந்தேகம் என்ன ?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

எத்தனை பெரிய மனிதருக்கு ...

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
(எத்தனை பெரிய)

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

கடவுள் இருக்கின்றார் ...


கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?
கண்ணுக்கு தெரிக்கின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இருளில் விழிக்கின்றாய்
எதிரே இருப்பது புரிகின்றதா ?
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா
வெளியே தெரிகின்றதா ?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான்
அவன் தன் போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா
உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா?
சஞ்சலம் வருகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
தேடியும் கிடைக்காது
நீதி தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது!
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
காக்கவும் தயங்காது!
கடவுள் இருக்கின்றான்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
கண்ணுக்கு தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்
கடவுள் இருக்கின்றான்

பலப் பல ரகமா...

பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......

மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......

அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி(2) ....
(பல பல பல பலரகமா.......)

அழகான சின்னப் பொண்ணு போவுது ...

அந்தி சாயும் நேரத்திலே
ஆசை மச்சான் ஓரத்திலே
ஆசை மச்சான் ஓரத்திலே


அழகான சின்ன பொண்ணு போவுது
பாத்தா பழகாத ஜோடி போல தோணுது
ஆமா அழகான சின்ன பொண்ணு போவுது
பாத்தா பழகாத ஜோடி போல தோணுது

ஆத்தாடி இவ கோவக்காரி
ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி ஜாலக்காரி அஹா ...
ஆத்தாடி இவ கோவக்காரி
ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி ஜாலக்காரி
பார்த்தாலே தெரியுதடி
பசு போல மனுஷனைதான்
பார்த்தாலே தெரியுதடி
பசு போல மனுஷனைதான் கூத்தாட செய்யும்
பலே குறும்புக்கார பொம்பளைதான்
கூத்தாட செய்யும் பலே குறும்புக்கார பொம்பளைதான்

அழகான சின்ன பொண்ணு போவுது
பாத்தா பழகாத ஜோடி போல தோணுது

ஆசை ரொம்ப இருக்குது
ஆசை ரொம்ப இருக்குது
அழுத பொண்ணு சிரிக்குது
வேஷம் கலைஞ்சு போச்சுது
வெறிச்சு வெறிச்சு பார்க்குது
முன்னே வந்தா முறுக்குது
கொஞ்சம் பின்னே வந்தா சினுக்குது
முன்னே வந்தா முறுக்குது
கொஞ்சம் பின்னே வந்தா சினுக்குது
கண்ணை கண்ணை சிமிட்டுது
கண்ணை கண்ணை சிமிட்டுது
இது காதல் போல தெரியுது
புது காதல் போல தெரியுது

அழகான சின்ன பொண்ணு போவுது
பாத்தா பழகாத ஜோடி போல தோணுது

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...

பாடல் :ஆத்மநாதன்
இசை :டி.ஆர்.பாப்பா
பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்


ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

காசிக்கு போகும் சந்நியாசி ..

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

உறங்கும் போது பானைகளை ....

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது

புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா

ஏற்றமுன்னா ஏற்றம் ...

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ .....

அவள் ஒரு நவரச நாடகம் ....

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்


மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்


குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
 
 
அறுசுவை நிரம்பிய  பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை



வெற்றி மீது வெற்றி வந்து ..

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

இரண்டு கண்கள் ...

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
கவிதை ஆனதம்மா கவிதை ஆனதம்மா
நான்கு கண்கள் கூடும் போது
கனவு காணுதம்மா கனவு காணுதம்மா

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ
முன்னூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ
முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ
முன்னூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ


கள்ளத் தென்றல் பிள்ளை தமிழை அள்ளித் தந்ததோ
கள்ளத் தென்றல் பிள்ளை தமிழை அள்ளித் தந்ததோ
உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி
அதையும் கேட்காதோ
ஏன் கேட்கக் கூடாதோ

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

சிங்கார தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ
சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ
சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்
சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்
நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தேவ திருநாளாம்
தேவ திருநாளாம்

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

Thursday, May 29, 2008

அங்கே வருவது யாரோ ....

அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ


கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆஆஆ நேரம் இந்த நேரம்
போனால் நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வள்ளலின் தேரோ

அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அது வசந்ததின் தேரோ


கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் சேவை என்று தேடி பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

வருவது யாரோ
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

பாடும்போது நான் ...

பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று



மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து


எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே -
இன்ப நாளும் இன்று தானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

கல்யாண வளையோசை கொண்டு ....







கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

மாமன் என் மாமன்
மாமன் என் மாமன்
கஞ்சி வரக் காத்திருக்க
கண்ணிரண்டும் பூத்திருக்க
வஞ்சி வரும் சேதி சொல்லு
வந்த பின்னால் மீதி சொல்லு


கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு


பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய
கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ
ஆசை இருக்காதோ


கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இங்கு
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு


ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
ஆஆ இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவிச் சிரிக்காதோதாவிச் சிரிக்காதோ


கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இன்று
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு

நேரம் பௌர்ணமி நேரம் ....

நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க
அஹா ?.
இணையும் வரையில் துடிக்க
ஓஹோ ??
இளமை கவிதை படிக்க

(நேரம் பௌர்ணமி நேரம் )

வான் படைத்த மேகம் தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில் மிதப்பது என்ன தாகம்
தேன் படைத்த பூவும் தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம் என்னவென்று காட்டும்
இன்றும் இன்னும் இன்னும் இன்பரசம் காண வேண்டும்
பெண்மனசு கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்
(நேரம் பௌர்ணமி நேரம்)

தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊரும் என்னிடத்தில் சேரும்
பூவிதல்கள் நான்கும் பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
அச்சம் வெட்கம் விட்டபின்பு கேட்க வேண்டும்

(நேரம் பௌர்ணமி நேரம்)

என் யோக ஜாதகம் ...

என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது

பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக
அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !
மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட
இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !


கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்


என் பத்து விரல் தழுவ தழுவ
உன் முத்து உடல் துவழ துவழ இதமோ
என் கட்டழகன் குலவ குலவ
கை தொட்ட இடம் குளிர குளிர
சுகமோ சுகமோ சுகமோ


தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
இரவோ பகலோ மடி மேலே
வருவேன் விழுவேன் கொடி போலே
இதழோ இடையோ பரிமாறு
இதுவோ அதுவோ விளையாடு


இரவெல்லாம் இன்பம் என்னும்
பொய்கை இங்கே பொங்கும்
நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்


உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
மங்கை என் கை உன் மாலை என்றாட

இதழே இதழே ...

இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)

ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
(ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் )
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி

(இதழே இதழே )

நீராடும் துறை என்று நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு

(இதழே இதழே )

கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தன் முதல் இரவு
நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு
ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு
Please help me...

(இதழே இதழே )

அன்னைஎன்று ஆகுமுன்னே ...

அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேண் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே


முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
அந்த பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
அந்த பார்வை எந்தன் மீதோ
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்


செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது
காணிக்கை ஏது நான் தரும்போது
காதலில் சுவைஎது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்


நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இலமேணி எந்நாளும் உனக்காக
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும் மேடை நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடை நீயாகும்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்


வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
நான் ஒரு சுகம் காண நேர்ந்தது
உன்னாலே மறைத்து ஒரு பாதி மறந்தது
ஒரு பாதி எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்
( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ....

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

என் கை வளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான் எந்தன் குறை தீர
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ
(ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் )

என் பாதத்தில் தலை வைத்து படுத்திருப்பான்
கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான்
என்னை சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான்
சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான்
பின்பு துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக
ஓஹோ ஓஹோ ஓஹோ
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ

நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான்
தன் அனுபவ நெஞ்சத்தை செலவழிப்பான்
மலர் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான்
அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான்
இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக
ஒஹொஹொஹ்
அது நீயன்றோ அது நீயன்றோ
அது நீயன்றோ அது நீயன்றோ
(ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் )

ருக்மணியே பற பற பற ...

ருக்மணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ

செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ


(ich - please once again)

(ருக்மணியே பற பற பற )

உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே

(look at me)

(ருக்மணியே பற பற பற )
தேடினேனே உன்னை தேடினேனே
என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையோ
என் கண்ணை போல வண்ண மீன்கள் நீரில் இல்லையோ
ஒன்று போல ஒன்று உலகில் காண்பது உண்டு
பாலில் உள்ள வெண்ணிறம்
எந்தன் கண்ணில் இல்லையோ
பொன்னை போல மேனி கொண்ட பூவை அல்லவோ
சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ
எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும்
ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ

(ருக்மணியே பற பற பற )

Wednesday, May 28, 2008

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
(ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2)
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
(ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
(ஒருவர் சொல்ல )

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ....

மானல்லவோ கண்கள் தந்தது ...

மானல்லவோ கண்கள் தந்தது
ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது

ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆ ஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு
ஆ ஆஆ ஒ ஒ ஒ
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வண்ண மலர் மாலை கொண்டு
வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன்
இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன்


மானல்லவோ கண்கள் தந்தது
ஆ ஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆஆஆஆஆஅ
தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆஹா
சின்ன யானை நடையைத் தந்தது
ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ம் ஹும்
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

இன்னொரு வானம் ...

இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்


ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம்
ஆ ...ஆ ..ஹோ .
ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம் ஆடும் பாவை வண்ணம்
ஆ ..ஆ ..அஹ
தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான் மீதி உண்டு இன்னும்

(இன்னொரு வானம் )

கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன்
அன்பே மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன்
அன்பே விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்

"Life is short.. Make it sweet"

கொட்டி கொடுத்ததும் குடித்து குடித்து மயங்கும் கதை இது
பொன்னை அடுத்ததை மடியில் எடுத்து மறைக்கும் கதை இது
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்
(இன்னொரு வானம் )

மேகங்கள் இருண்டு வந்தால் ..

ஓடி வந்து மீட்பதற்கு ...
உன்னை போல் கால்கள் இல்லை ...
ஓய்ந்திருந்து கேட்பதற்கு ...
நீதிக்கோ நேரம் இல்லை ...
பார்த்த நிலை சொல்வதற்கு ...
பரமனுக்கோ உருவம் இல்லை ...
பழி சுமந்து செல்வதன்றி ...
இவனுக்கோ பாதை இல்லை ...

மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ

நெஞ்சத்தில் நேர்மை வந்தால்
அதில் நீதிக்கு பெருமை உண்டு ... ஹோ ...
வஞ்சகம் தேரில் வந்தால்
அதை வணங்கிட முறையும் உண்டோ ...

மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ


த்யாகத்தின் தலை நிமிர்ந்தால்
இந்த தரணிக்கு லாபம் உண்டு ... ஹோ ...
தீமையின் கை உயர்ந்தால்
இங்கு தருமங்கள் வாழ்வதுனோ ...
அரும்புகள் மலர்ந்து வந்தால்
அந்த அழகினை ரசிப்பதுண்டு
பருந்துகள் திருட வந்தால்
அந்த பண்பினை பொருப்பதுண்டோ
உண்மைக்கு காலம் வந்தால்
சிலர் உயர் குணம் புரிவதுண்டு

ஊருக்கு நன்மை வந்தால்
நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ

பாட்டு வரும் ...

உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
(உன்னை )

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
(உன்னை )

கடவுள் செய்த பாவம் .....

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................

வாயார முத்தம் ....

வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது (வாயார )

கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான்
கங்கை கொண்டவன் மான் தொலைக் கொடுத்தான்
அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான் (வாயார )

அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும்
அங்கம் முழுதும் தமிழ் சங்கம் முழங்கும்
பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும்
பிள்ளை சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும் (வாயார )

சங்கே முழங்கு ....

சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

இதயத்தில் இருந்து ....

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை

மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன் ஆண்டவன் நீ என்று வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால் இதயத்தில் இருந்து இதழ்கள் வரை

அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை

தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் ஏன் சிரித்தாள் மங்கல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால் நீ தொடும் வேளையில் கொதிப்பதேன்
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்

இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
அது காதல் கதை

அழகை வளர்ப்போம் ....

அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட
தேனோடு தேன் சேர
இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

Heyy wots ur name baby
Mala
OHH how sweet name...
really ya lovely name
come lets dance baby....

எங்கேயோ பார்த்த ஞாபகம்
ஞாபகம் ஞாபகம் ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் மலர் காவியம்
எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம்
தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம்
அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் இவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் ஆடை கட்டி
வந்து நிற்கும் மேடு
பள்ளமானதொரு பாவை விழி
ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம்
மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற வாணி
பெற்ற பேரை வெல்க
வார்த்தை இவள் ஆணை
வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட
காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன் முகம் கண்டதும்
புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே வெறுப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே செய்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்

ஆனந்தம் இன்று ஆரம்பம் ....

ஆனந்தம் இன்று ஆரம்பம்

மெல்ல சிரித்தால் என்ன

இதழ் விரித்தால் என்ன (2)

மலர்கள் சிரிக்கும் கொடியில்

அலைகள் சிரிக்கும் கடலில் (2)

நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன -

ஆனந்தம்

உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து

உதவும் சமயமல்லவோ

கரும்பின் சுவை வடித்து திரும்ப அதை கொடுக்க

விரும்பும் இதயமல்லவோ

கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்

ஒரு கதை பேசலாம்

அதில் சுகம் காணலாம்

குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க

பூவாட்டம் நான் மிதக்க கண்ணோட்டம் வந்ததென

என்னை அழைக்க என்னை அழைக்க -

ஆனந்தம்

தாலாட்ட காத்திருக்க தென்பாங்கு பாட்டிருக்க

தேவிக்கு தேவை என்னவோ

கண்நூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம்

கண்டாலும் போதை அல்லவோ

முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று

தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ

செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று

சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ -

(ஆனந்தம் )

தங்கப் பதக்கத்தின் மேலே ....

தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவது உண்டு
அழகு நடையை பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே (தங்க)

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன ?
உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுத்தது என்ன ?
பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ? ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ? (தங்க பதக்கத்தின்) மேலே

கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மண மாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு (தங்க)

Tuesday, May 27, 2008

ஆசை இருக்கு .....


ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
ஆ அப்படி இல்லை நான் காதலிக்கறேன் பாரு
ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு

முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
ஆச வச்ச காரணம் ஆயிரமா கூறனும்
இவருகிட்ட ரகசியம் இருப்பதொரு காரணம்
ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
கணக்கு வச்சி தானே வந்தேன் காட்டுபக்கம் வெளியிலே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
மாப்பிள்ளை நீ எத்தனையோ மணிமுத்தம் சிந்தினே
ஆ ..ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
கண்ணாடி பார்க்கவோ கையாலே வாங்கவா
பெண்ணாலே ஆகுமுன்னு தன்னாலே காட்டவா
ஆ ..ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ..

எப்படியோ காரணம் இப்போதே நடக்கணும்

நீல நிறம் ...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
(நீல நிறம் )

இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
(நீல நிறம் )

கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா
(நீல நிறம் )

தொட்டால் எங்கும் ...

தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று , பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. (தொட்டால் )

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ?
இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
என்னை பெண்ணாக்கி நீ தந்த
இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா ..
அன்று கண்ணாடி முன்னாலே
நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. (தொட்டால் )

கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா
கட்டில் கொண்டாட காவியம் பண்பாட
தொட்டில் உறவாட பிள்ளை வரும்
இன்று நான் கொண்ட முத்தங்கள்
அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ ..
இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ .. (தொட்டால் )

பதினாறு வயதினிலே ...

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா


ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்


வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்


பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா

மாலையும் இரவும் ...

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினைப் போலே

மன மயக்கத்தை தந்தவள் நீயே ஊ

வழியில் வந்தவள் நீயே

பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே

பொங்கி வந்தவன் நீயே

நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே

எந்தன் தலைவன் என்பதும் நீயே

ஒ தாவி தழுவ வந்தாயே

(மாலையும் )

காவிரி கெண்டை மீன் போலே

இரு கைகள் படாத தேன் போலே

கோவில் முன்புற சிலை போலே

எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே

பூ மழை பொழியும் கொடியாக

பூரண நிலவின் ஒளியாக

மாமணி மாடத்து விளக்காக

மார்பில் அணைத்த மன்னவனே

என்னை மார்பில் அணைத்த மன்னவனே

(மாலையும்)

தலைவன் திருவடி நிழல் தேடி

நான் தனியே எங்கும் பறந்தோடி

ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே

எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே

திங்கள் முகத்தில் அருள் ஏந்தி

செவ்வாய் இதழில் நகை ஏந்தி

இளமை என்னும் படை கொண்டு

என்னை வென்றாயே நீ இன்று

என்னை வென்றாயே நீ இன்று

(மாலையும் )

சீர் மேவு குரு பாதம் ....


சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே

சரி
சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்
வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்
எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே
சீரெடுத்து பாடி வாரேன் தானே
அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்

யானையை பிடித்து யானையை பிடித்து
ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப் படுபவர் போல் அல்லவே
உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி
புலியைப் பிடித்து தின்ன
புறப்பட்டக் கதை போல் அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
கேள்விக்கு பதிலை கொண்டா

உடைச்சி ஏறிவென் ரெண்டா
உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா
அப்புறம் பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

சொல்றேன்
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான்
கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
பாத்துக்கடா சரிதான்

அன்ன சத்திரம் இருப்பது எதனாலே
பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே
எப்படி

பரதேசியாய் திரிவது எதனாலே
ம்ம்ம்....அவன் பத்து வீட்டு
சரி ..... வேணாம்
அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ

புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா

அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா


உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

நாளை உலகை ...

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு
நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

இது தான் முதல் ராத்திரி ....

இது தான் முதல் ராத்திரி (2)
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு (2)
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி (2)
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி (2)
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ
நீ சொன்ன மாதிரி (2)
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி (2)
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி


திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாளிகை (2)
கடல்போல் கொஞ்ச கைகளில் வந்து
சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

Monday, May 26, 2008

அழகெனும் ஓவியம் இங்கே ...

அழகெனும் ஓவியம் இங்கே ..
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே ..
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..

காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் -
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம் )


என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(இலக்கிய காவியம் )

ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம் )

இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்


புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ
(இரவு பாடகன் ஒருவன் வந்தான் )
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

சொர்க்கத்தின் திறப்பு விழா ...

சொர்க்கத்தின் திறப்பு விழா

இங்கு சொக்கத்தின் திறப்பு விழா

புது சோலைக்கு வசந்த விழா

பக்கத்தில் பருவ நிலா

இளமை தரும் இனிய பலா

பார்க்கட்டும் இன்ப உலா

(இன்று சொக்கத்தின் )

மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே

ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே

தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்

இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்

உயிரோடு உயிராய் ஒன்றாகி நிற்கும்

உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள்

புது மொழிகள் புது மொழிகள்

(சொர்க்கத்தின் திறப்பு விழா )

பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது

தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது

இளவேனில் காலத்தில் திருமணமோ

இனி எப்போதும் வாராத நறுமனமோ

பூவென்ன பூவோ வண்டேன்ன வண்டோ

சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ

கதை இதுவோ ?கதை இதுவோ ?

(சொர்க்கத்தின் திறப்பு விழா )

போய் வா நதியலையே ..

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா (2)
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா (2)

கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்
நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
இது போதும் என்று தடுமாறி
இடம்மாறி மாறி சுகம் தேடி
ஆ ..உறவாடும் போது சரிபாதி ஆகி
உயிர் காணும் இன்பம் பல கோடி

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா (2)

நுரை பூவை அள்ளி அலைசிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்
வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்
மெதுவாக வந்து இதழ் மோதி
பதமாக அன்பு நதியோடி
ஒ ..மண மேடை கண்டு புது மாலை சூடி
குல மங்கை வாழ நலம் பாடி

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா

ஒன்றே குலமென்று ...

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

என்னை விட்டால் யாருமில்லை ....

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரேதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின்  சிலைகளில் ஒன்று
வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
(என்னை விட்டால் )

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ
(என்னை விட்டால் )

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு
(என்னை விட்டால் )

அன்புக்கு நான் அடிமை ...

அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

நல்ல கொள்கைக்கு நான் அடிமை

தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை

அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்

முகங்கள் நான் பார்க்கிறேன்

இதயம் எங்கும் பாலைவனம் போல்

இருக்கும் நிலை பார்க்கிறேன்

அன்பு பணிவு அடக்கம் எங்கே

தேடி பார்த்தேன் தென்படவில்லை

(அன்புக்கு நான் அடிமை )

குடிக்கும் நீரை விலைகள் பேசி

கொடுக்கும் கூட்டம் அங்கே

இருக்கும் காசை தண்ணீர் போலே

இரைக்கும் கூட்டம் இங்கே

ஆடை பாதி ஆளும் பாதி

அறிவும் பாதி ஆனது இங்கே

(அன்புக்கு )

உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று

உறவு கொண்டீர்களே

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை

மறந்து போனீர்களே

நாகரீகம் என்பது எல்லாம்

போதையான பாதை அல்ல

(அன்புக்கு )

ஆடாத மனமும் உண்டோ ....

ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில்
வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே


முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போலவே
முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போல‌வே
அன்பை நாடி உந்த‌ன் அருகில் வந்து நின்றேன்
இன்ப‌ம் என்னும் பொருளை இங்கு க‌ண்டேன்
த‌ன்னை ம‌ற‌ந்து உள்ள‌ம் க‌னிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்

தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த நிறை த‌ன்னிலே
தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த‌ நிறை த‌ன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
ஆடாத மனமும் உண்டோ

திருவிளையாடல் காணீரோ .....

ஆடல் காணீரோ

விளையாடல் காணீரோ

திருவிளையாடல் காணீரோ ...ஓஒ ..

ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜபௌத்திர ...

பாடல் மதுரையில் ராஜபௌத்திர

பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்

திருவிளையாடல் காணீரோ ..ஓஒ ..

கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே ......

கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தனை

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தனை

ஏற்று வினை முடிக்கவே ...

பேற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய் ..

பிள்ளை பேற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய்

பிட்டுக்கு மண் சுமக்கவே ..

வந்து சித்தனை போல கை பிரம்பால் பட்ட அடி !

சித்தனை போல கை பிரம்பால் பட்ட அடி

பேசிடும் சகல ஜீவ ராசிகள் முதுகிலும் பட்டு

வலுவுற்ற ஈசன் - விளையாடல் காணீரோ ..ஓஒ ..

நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து ...

நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து

உயர் நால் வேத பொருள் சொல்லி

நாகத்தையும் வதைத்து

நால் வேத பொருள் சொல்லி

நாகத்தையும் வதைத்து

நக்கீரர் புகழ் நேசித்து ...

வரகுண பாண்டியற்கு சிவலோகம் காட்டி

வரகுண பாண்டியற்கு சிவலோகம் காட்டி

வலை வீசி மீன் பிடித்து ...

வாய் -திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி

வாய் -திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி

வைர வளை முத்து வளை ரத்ன வளை விற்ற -

விளையாடல் காணீரோ ..

பாடல் மதுரையில் ராஜபௌத்திர பாண்டியனாம்

எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ ..ஓஒ ..

சீட்டுக் கட்டு ராஜா.....

சீட்டு கட்டு ராஜா ராஜா -
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
ஊட்டி மலை ரோஜா ரோஜா -
உன்னை பார்க்கலாமோ லேசா லேசா
சீட்டு கட்டு ராஜா ராஜா ..

கெட்டி மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா ?
கோவம் கொண்டால் உன் உடம்பு என்ன வாகும் தெரியுமா ?
கெட்டி மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா ?
கோவம் கொண்டால் உன் உடம்பு என்னவாகும் தெரியுமா ?
கட்ட போகும் புருஷன் கொஞ்சம் தொட்டால் என்ன தோஷமா ?
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா ?
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா ?
கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா ?
சீட்டு கட்டு ராஜா ராஜா

ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ
பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ
அடுத்த மாசம் பாத்துக்கோ
அள்ளி தாரேன் வாங்கிக்கோ
ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ
பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ
அடுத்த மாசம் பாத்துக்கோ
அள்ளி தாரேன் வாங்கிக்கோ
சபாஷ் சபாஷ் மாப்பிளே
இப்போதான் நீ ஆம்பிளே
தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே

சீட்டு கட்டு ராஜா ராஜா -

பால் தமிழ் பால் ...

பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தங்க அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்

விழி சிவப்பால்
வாய் வெளுப்பால்
விழி சிவப்பால்
வாய் வெளுப்பால்
இடை இளைப்பால்
நிலை புரிந்தேன்

இந்த தவிப்பால்
மன கொதிப்பால்
இந்த தவிப்பால்
மன கொதிப்பால்
கண்ட களைப்பால்
நடை தளர்ந்தேன்

முத்து சிரிப்பால்
முல்லை விரிப்பால்
முத்து சிரிப்பால்
முல்லை விரிப்பால்
மொழி இணிப்பால்
என்னை இழந்தேன்

இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்
தன்னை மறந்தேன்

பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தங்க அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

கண்ணில் தெரிகின்ற வானம் ....

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ


பொன்னழகு , பெண்முகத்தில் , கண்விழுந்தால் என்னாகும்
பொன்னழகு , பென்முகத்தில் , கண்விழுந்தால் என்னாகும்
பொன்னாகும் , பூவாகும் , தள்ளாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எத்தனை சிந்தும் ?
கொடுக்கும் கரங்கள் துடிக்க எடுத்து முடிக்க
சொல்லும் மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம்
கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்தது விடு சொல்லிவிடு ...சொல்லிவிடு ..
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்


அருவி விழுந்தது நதியில் நடந்தது
கடலில் கலந்ததென்ன
பருவம் மலர்ந்து மடியில் விழுந்தது
பழகும் கதையை சொல்ல நதி வந்தது
கடல் கொண்டது சுவை கண்டது
என்ன சொந்தம் இது கொஞ்சவரும் ,
வஞ்சியரின் , நெஞ்சம் இது
ஆட வந்தேன் மேடையிலே
ஆடிவிட்டேன் உன் மனதிலே
ஆடுவதை காணவந்தேன் ஆடவைத்தேன் உன்மனத்தை

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ

Sunday, May 25, 2008

மச்சானா மாமாவா ....

மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
பாக்கறாரு
அச்சம் தருவாரோ
அடையாளம் பெறுவாரோ

மீதி உள்ள செய்தி சொல்ல
தேதி வைக்க சொல்வாரோ
மச்சானா .....

மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா
மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா
சாமிக்கு தேவை என்ன -தேரோட்டம்
பூமிக்கு தேவை என்ன -நீரோட்டம்
ஆசைக்கு தேவை என்ன -கண்ணோட்டம்

மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளே தான்
மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளே தான்
வயசுக்கு வந்தாளைய்யா வா வா வா
மனசைத்தான் கேட்டாளைய்யா தா தா தா
விட்டுத்தான் செல்லாதைய்யா நில் நில் நில்
தொட்டு தான் கட்டில் பாடம் சொல் சொல் சொல்

மச்சானா ...

சுகம் எதிலே .....

சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா


இரண்டு கண்கள் எங்கும் சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

ஆசை உண்டாக காரணம் யாரோ அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ தெரியாத ஆண்களா ...
பெண்ணே உன் பார்வை பேசும்போது சொல்லாத போய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள் செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள் சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

முன்னே உலாவும் பெண்ணை கண்டால் முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள் நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம் சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

முத்தமோ மோகமோ .....

முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...

பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது

முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...

இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது ...
கட்டழகை ... தொட்டு விடு ... தட்டாமல் இன்றாவது ...
தொட்டவுடன் ... துடிப்பதற்க்கே ... துணை இது உண்டானது


முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...

Saturday, May 24, 2008

கட்டோடு குழல் ஆட ...

கட்டோடு குழல் ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
கொண்டாடும் மயிலேறி ஆடு
கட்டோடு ...

பாவாடை காத்தோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு ....

முதிராத நெல் ஆட ஆட
முளைக்காத சொல் ஆட ஆட
உதிராத மலர் ஆட ஆட
சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு ...

தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட
செண்டாக நீ ஆடு
கட்டோடு ....


பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு
கட்டோடு .....

ஒருவர் ஒருவராய் ....

ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்(2)
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்

இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

ஒன்று எங்கள் ஜாதியே ...

ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )

நினைத்ததை நடத்தியே .....

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம் !
எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
முதல் நாள் - மெல்ல தொடலாம்
மறு நாள் - மிச்சம் பெறலாம்
அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
இதழ்மேல் ஒரு பாடல்
மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))

நான் ஒரு மேடைப் பாடகன் ...

நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன சங்கீதம்
உண்டென்று அங்கங்கு செல்கின்றவன்


Is anybody interested In singing with me ?
Myself
Oh ! Pleasure is mine !!
Please come

நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !! (நான் ஒரு மேடை )

Will anybody else Join with me ?
better choice
Shall I ?
Oh ! You please come !!

நான் அரங்கேற்றம் ஆகதவள்
யார் முன்னாலும் பாடதவள்
என் சங்கீதம் மழலை மொழி
நான் நின்றாடும் பருவக்கொடி

Am I correct ?
Perfectly All right !!
Proceed

பாதி கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு
பெண்ணென்று முன்வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண்கொண்டு சொல்கின்றவள் ஓ ..
நான் ஒரு மேடை பாடகி !
பால் நிலவென்ன நேர் வந்ததோ ?
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ ?
சாயல் விழி என்ன மொழிகின்றதோ ?
யார் உறவென்று புரிகின்றதோ ?
இங்கு வண்டொன்று செண்டோன்று என்றென்றும்
ஒன்றொன்று கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூட
காலம் நேரம் பொன்னானது
காதல் நேரம் நெஞ்சானது
நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று நேருக்கு நேர் கண்டவன்
இங்கு நாமாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே


Come on folks
Swing and Sing
Everybody

துள்ளுவதோ இளமை .....

பட்டு முகத்து சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும் இந்த கைகள்
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ..
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை

மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா
வேல் ஆடும் பார்வை தாளாத போது
வேல் ஆடும் பார்வை தாளாத போது
நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா
(துள்ளுவதோ இளமை )
ஹோய் ..பப்பா
ஹோய் ..பப்பா
ஹோய் ..பப்பா
ஹோய் ..பப்பா

தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
(துள்ளுவதோ இளமை )
ஹோய் ..பப்பா ஹோய் ..பப்பா

காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆணோடு பெண்மை ஆறாகும் போது
வேர் இன்பம் வேண்டுமா
வேர் இன்பம் வேண்டுமா
(துள்ளுவதோ இளமை )

உன் விழியும் என் வாளும் ....

உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
கொடியும் கனியும் இதழும் மதுவும்
எதுவும் எனதாக
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்


உன் விழிகள்
கத்தியின் கூர்மை
உன் இதழ்கள்....
உன்னை மயக்கும் மதுக்கின்னம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கண்ணாடி
உன் இதயம்
உன்னை சிறை வைக்கும் பள்ளியறை
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
தித்திக்கும் முத்தங்கள் எத்தனையோ
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன

என் வாளும் உன் தோளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக என் வாளும் உன் தோளும் சந்தித்தால்

சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
பொன் வண்ண பெண்ண் மேனி தண்ணீரில் தள்ளாடுமோ
தண்ணிக் கொஞ்சம் தழுவிகொள்ள
என்னை கெஞ்சும் பார்வை என்ன
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்

முத்துமொழி பேசும் கிள்ளை
முத்த மழை சிந்தும் முல்லை
கன்னத்தின் கிண்ணத்தில் என்னென்ன வண்ணங்களோ
இதயம் முழுதும் கவிதை எழுது
இரவும் பகலும் பாடி பழகு
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
கதை சொல்லும் மனம் வெல்லும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

மின்மினியை கண்மணியாய்.....

மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
ஹோ ஹோ ஹோ
சச்சா ம்ம்மா பாப்பா
ல ல ல ல...
சச்சா ம்ம்மா பாப்பா
சச்சா ம்ம்மா பாப்பா

அழகு மகன் மழலை மொழி
தென் பொதிகை செந் தமிழோ
அழகு மகன் மழலை மொழி
தென் பொதிகை செந் தமிழோ
இளமைதான் சிறு கதையோ
இதயமதை எழுதியதோ
இளமைதான் சிறு கதையோ
இதயமதை எழுதியதோ
முத்து முகம் முழு நிலவோ
முப்பது நாள் வரும் நிலவோ (சச்சா )



மணி பயல் சிரிப்பினில்
மயக்கிடும் கலை படைத்தான்
பசி குரல் கொடுக்கையில்
புது புது இசை அமைத்தான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
(சச்சா

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
(சச்சா)

பொம்பளைக்கு .............

don't touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
stupid! hmm.. idiot! aahhn.. nonsense! hmmm!

don't shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!


பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் வாழ்க்கை

don't touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்

பிள்ளை இருக்கும் இடத்தில்
தொண்டை விரித்தது கருத்துக்
காத்துக் கதைகள் படிக்க
பொய்யா பொய்யா
அத்திபழத்தை எடுத்து
கொத்தி கடித்த சுவைக்கு
சித்‌தம் இனிக்கும் வயது
வாம்மா வாம்மா
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
கன்னங்கள் என்னாகும்
இன்னும் தான் பொன்னாகும்

don't touch me Mr.X don't shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
தன்னை ஒருத்தி மிரட்டி
உள்ளம் கொடுத்து வந்து
பெண்ணை நினைத்தது உருகும் போராட்டமா
தங்க குடத்தை எடுத்து
சின்ன இடையை ஒடித்து
தத்தி நடக்கும் அழகு தேரோட்டமா
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் உன் வாழ்க்கை

don't touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
stupid! idiot! nonsense

Friday, May 23, 2008

நான் மாந்தோப்பில் ....

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான் !!

நான் தண்ணீர்(ப்) பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள் !
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள் !!


ஒன்று கேட்டால் என்ன ? கொடுத்தால் என்ன ?
குறைந்தா போய் விடும் என்றான் !
கொஞ்சம் பார்த்தால் என்ன ? பொறுத்தால் என்ன ?
மறந்தா போய்விடும் என்றாள் ! ((நான்))

அவன் தாலி காட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்
அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது ?
என்றே கதை படிச்சா !!
அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமே
என்றே கையடிச்சான் !!
அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதை(க்) கடிச்சா ! ((நான்))

அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே வந்து
வண்டாய் சிறகடிச்சான் !!
அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை பிடிக்க
கண்ணாலே வலை விரிச்சா !!
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான் !!
அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்துல
அழகா(த்) தெரிஞ்சு(க்) கிட்டா !! ((நான்))