Tuesday, May 20, 2008

சக்கரைக் கட்டி ராஜாத்தி ....

சக்கரைக்கட்டி ராஜாத்தி -
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே -
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி


பட்டுப் போன்ற உடல் தளிரோ -
என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
கண்டு கொள்வது சுகமோ
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் -
விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
சேதி என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்


அத்தை மகனே அத்தானே -
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே -
நான்பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்.ஆஹா..
(சர்க்கரை)


ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
மடியைத் தேடி வந்து விழவோ -
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மாலை வரையில் சே(சோ)லை நிழலில்
கண்கள் உறங்கிட வரவோ
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
சேதி என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்
(சர்க்கரை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி