Saturday, June 11, 2011

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு  தாயென்றும் தாரமென்றும்  பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை


தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை  செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை  
(காமுகர் நெஞ்சில் ..)


காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல  செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்  
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)






 

Friday, June 10, 2011

அடக்கு மனதை அடக்கு

அடக்கு ...ம்....
அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும்  மனதை அடக்கு
அடக்கு

ஆபத்துக்கு உதவி செய்தால்  பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
அன்புக்காக  ஏங்குவதில் கேவலமில்லை   
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை
(அடக்கு ....)


ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை
இந்த உண்மையை  நீ ஒப்புக் கொண்டால்
உலகுக்கு நன்மை
பொறுமையுடன்  கருணை சேர்ந்து  
பிறப்பது  பெண்மை
இதை  புரிந்து   நடக்கும் பெண்கள் நெஞ்சம்
பாலினும் வெண்மை
(அடக்கு ...)


ஆண்கள் என்றும் பெண்கள் என்றும்
தனித்தனியாக
அந்த ஆண்டவன் ஏன் பிரித்து வைத்தான்
மிக தெளிவாக
ஜகத்தினிலே ஆணும் பெண்ணும்  ஓர் உயிராக 
இங்கே சேர்ந்து வாழும் தத்துவத்தை 
சொல்வதற்காக  
(அடக்கு ... )


Thursday, June 9, 2011

நீங்க நெனச்சா நடக்காதா




நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே

(நீங்க நெனைச்சா )



ஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தின் கொடியிருக்கும்

கொடியை தழுவிட செடியிருக்கும்

ஆ தனிமையில் இருக்கையில் குளிருது

எனக்கொரு துணை எங்கே

(நீங்க நெனச்சா ..)



நீலப் பூப்போட்ட சேலை கட்டி

நெத்தி நெறைய பொட்டு  வச்சேன்

காலம் பூராவும் காத்திருக்கேன்

காதல் போகாம பார்த்திருக்கேன்

ஆ அடிக்கடி துடிக்குது துவழுது

உனக்கிது புரியல்லே

(நீங்க நெனச்சா )



நேத்து நான் வச்ச சின்ன மரம்

பூத்து குலுங்குது தோட்டத்திலே

பூத்து நாளான கன்னி மரம்

காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே

ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது

இதுக்கொரு வழியென்ன

(நீங்க நெனச்சா ...)















http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR - Film