மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே ஊ
வழியில் வந்தவள் நீயே
பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே
பொங்கி வந்தவன் நீயே
நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே
எந்தன் தலைவன் என்பதும் நீயே
ஒ தாவி தழுவ வந்தாயே
(மாலையும் )
காவிரி கெண்டை மீன் போலே
இரு கைகள் படாத தேன் போலே
கோவில் முன்புற சிலை போலே
எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே
பூ மழை பொழியும் கொடியாக
பூரண நிலவின் ஒளியாக
மாமணி மாடத்து விளக்காக
மார்பில் அணைத்த மன்னவனே
என்னை மார்பில் அணைத்த மன்னவனே
(மாலையும்)
தலைவன் திருவடி நிழல் தேடி
நான் தனியே எங்கும் பறந்தோடி
ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே
எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே
திங்கள் முகத்தில் அருள் ஏந்தி
செவ்வாய் இதழில் நகை ஏந்தி
இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாயே நீ இன்று
என்னை வென்றாயே நீ இன்று
(மாலையும் )
1 comment:
தி சவுண்டாப் மியூசிக் படத்தின் தழுவல்தான் சாந்தி நிலையம் என்று நான் கேள்விப்பட்டேன் சரிதானே.
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா எல்லார் ஈஸ்வரி பாடிய இந்த பாடலும் அந்த படத்தில் வரும் மெட்டுதான் சரிதானே
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி