Wednesday, May 21, 2008

தொட்டுக் கொள்ளவா .....

தொட்டுக் கொள்ளவா -
நெஞ்சில்தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா - மெல்லப் பழகிக் கொள்ளவா
கட்டிக் கொள்ளவா - உன்னைக்கலந்து கொள்ளவா
தட்டிக் கொள்ள வாவாவா -
மெல்லத்தழுவிக் கொள்ள வா
(தொட்டு)


மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா -
உன்மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா -
நான்பந்தலுக்குள் பந்து விளையாடவா
ஆடும்போது சிந்து கவி பாடவா -
நான்அம்மம்மா என்று கண்ணை மூடவா
(தொட்டு)


தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம் -
நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம் -
அதுகாலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம் -
காலம்இன்னும் உண்டு..
அதற்குள் என்ன ஆத்திரம் ?
(தொட்டு)

1 comment:

Unknown said...

மிகவும் ரசித்த பாடல்.கண்ணதாசனுக்கு மட்டும்
தாள் முடியும்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி