Friday, June 4, 2010

அழகான பெண்மானைப் பார்...

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


மீன் போலும் கண்கள்
வெண்சிலை போலும் மேனி
சேர்ந்தே சுகமாகுதே
தினம்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை...)


வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


தானாக வந்து உன் அருகே நின்றாடும்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

இன்பம் ...

ஆ ஆ ஆ ஹஹஹ்ஹா ஆ ஆ
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே


ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்

இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்

இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்

என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா

Thursday, June 3, 2010

கண்ணின் கருமணியே ...

கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே

எண்ணம் நிறைவதனால்
எழில்சேர் ஓவியம் நீ மதனா
(கண்ணின்...)


நல்ல உயிர் நீயே
துடிக்கும் நாடியும் நானே

பஞ்ச பாடல் நீரே என் மதனா
பாவை ரதியும் நானே
(கண்ணின் ...)


ஊனமில்லா நல்லழகே
ஊறுசுவையே கலாவதி

அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
(கண்ணின் ...)


ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே
ஜோடி கிளியென வாழ்வோமே
நாம் வாழ்வோமே
ஜோடி கிளியென வாழ்வோமே