Wednesday, April 22, 2009

பாற்கடல் அலை மேலே

பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா -
உந்தன் பதமலர் நிதம் தேடி
பரவசமோடு பாடி கதி பெறவே
ஞானம் நீ தா தேவா


காதகனான ஒரு சோமுகன்
கை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்
பின்னர் மேதினி தான் மீள
பாதகன் தான் மாள
மீனவதாரம் செய்த திருமாலே


வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த
மந்தரகிரி தன்னை தாங்கிடவே -
ஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என
கோலமுற்றாய் புகழ் ஓங்கிடவே


ஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி
பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -
அவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே
நானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே


எங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற
ஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -
அந்த தூணில் இருப்பான் என்று
இயம்பியதால் நேர்ந்த தொல்லை
நீங்கவும் பொங்கு சினவம்பனர்கள்
பூத உடம்பும் தசை தின்ரெழுந்து
தோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே
நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே

ஷங்கு சக்ர தாரனே
உபகாரனே ஆதாரனே


மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே
க ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி
தந்தை ஆவியை பிரித்ததனால்
சூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே


தேவர்களை சிறை மீட்டு
ராவணாதி உயிர் மாய்த்த
தஷரத ஸ்ரீ ராம அவதாரனே
பூமி தனிலே புகழையும்
உழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே


ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா
கோபாலகிருஷ்ணனா ஆதிமூலா பரிபாலா


பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ரபேதகம் செய்த
அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரன்
சிங்காரன் தசாவதாரன் நீயே

Friday, April 3, 2009

யாருக்கு யார்

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம்
வந்த போது உண்மையிலே
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

Thursday, April 2, 2009

அன்பே வா

அன்பே வா அன்பே வா வா
அன்பே வா அன்பே வா வா

உள்ளமென்றொரு கோவிலிலே
தெய்வம் கண்டேன்
அன்பே வா

கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் கண்டேன்
அன்பே வா

அன்பே வா வா
அன்பே வா வா