Thursday, May 22, 2008

வனமேவும் ராஜகுமாரா .......

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா


வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனம்போலே நாம் இனி பாரில்
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்டெய் செல்வோம் அதன் தேரில்
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே


வனமேவும் ராஜகுமாரா

மல்லாடும் வீரரெல்லாம் ....
மல்லாடும் வீரரெல்லாம்
வணங்க வரும் மன்னவரே அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே
உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே


வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே


புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா


வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி