Thursday, May 8, 2008

இந்த பச்சைக் கிளிக்கொரு .....

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் -

நான் ஆராரோ என்று தாலாட்ட -
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) -

நான் ஆராரோ என்று தாலாட்ட -
இன்னும் யாராரோ வந்து பாராட்ட (இந்தப்)


தூக்கமருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் -
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள் (2) -

நான் ஆராரோ என்று தாலாட்ட -
இன்னும் யாராரோ வந்து பாராட்ட (இந்தப்)


ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் -
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) -

நான் ஆராரோ என்று தாலாட்ட -
இன்னும் யாராரோ வந்து பாராட்ட (இந்தப்)


பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை -
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) -

நான் *ஆராரோ என்று தாலாட்ட -
இன்னும் யாராரோ வந்து பாராட்ட* (இந்தப்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி