Tuesday, June 10, 2008

சின்னஞ் சிறு சிட்டே ....

சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ..
நீ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா
செய்யாதே தாஜா

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே
சிட்டு என்றும் பட்டு என்றும்
ஊரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை
டௌலத் உன்னை ஏய்க்க பாக்கல
நான் உன்னை ஏய்க்க பாக்கல
கட்டிகொள்ளும் முன்னே நம்ப மாட்டாள் புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி
கொஞ்சம் கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேண்டி
தொட்டு தான் பாரேண்டி

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

நம்ப செய்து ஓடி போனால்
நான் என்ன செய்வது
நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை
உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது...

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே
வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே

3 comments:

ஜீவிதன் said...

இந்த பாடல் வரிகளை இங்கே தந்தமைக்கு மிக்க நன்றிகள்!! கூகிளில் தேடியபோது உங்கள் தளம் தட்டுப்பட்டது.

Anonymous said...

பாடல் வரிகளை கொடுக்கிறீங்க. அப்படியே படம் பேர், வருஷம், இசை, பாடினவங்க, பாடலாசிரியர் இதெல்லாம் குடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்ல?

பூங்குழலி said...

முயல்கிறேன் .நன்றி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி