Thursday, June 12, 2008

அதிசயம் பார்த்தேன் ...

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது-
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதிசயம் )

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதிசயம் )


அங்கே- சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே- தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை-
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி