Monday, June 2, 2008

திருநிறைச் செல்வி ...

இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே

திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி )

எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி