வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
பிள்ளை எனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும்
தன் உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்கு கூட
சொல்லால் தடை போடும்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்
இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வராவாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி