Thursday, June 5, 2008

கண்ணென்ன கண்ணென்ன ...

பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே


கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
(பட்டணம் பார்த்த)

குங்குமத்தை சுமந்து கொண்டு
குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு
கொழஞ்சி வரும் ஓய்யாரி ( 2 )
கட்டி முகம் கொண்டவளே
காதல் பேச வந்தவளே
எட்டி எட்டி நின்னு நின்னு
தவிப்பதென்ன இருட்டிலே
(பட்டிகாட்ட பார்த்து )

ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா ?
அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா ?( 2)
நேற்றிரவு வந்தவனா நெருங்க இன்பம் தந்தவனா
அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே
அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

1 comment:

Information said...

மிகவும் அருமை

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி