கால் கட்டு கை கட்டு இல்லாத பெண்களுக்கு
காதல் இல்லை என்றாலும்
காவல் ஒன்று வேண்டுமம்மா
காவல் ஒன்று வேண்டுமம்மா....
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா... சொல்லம்மா...
(பட்டுப் பாவாடை)
கட்டழகை ஆடை கொண்டு
சுற்றி விட்ட கோலம் என்ன
வட்டமிடும் கண்கள் ரெண்டும்
கொட்டிவிட்ட பாவம் என்ன
பெண்மை ஒன்று ஆண் என்று
மாறி வந்த சேதி என்ன (பட்டுப் பாவாடை)
கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு
கண்ணெடுத்து பார்ப்பதென்ன
கன்னம் மின்னும் வெள்ளி தட்டு
துள்ளி வந்து கேட்பதென்ன
தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன (பட்டுப் பாவாடை)
பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும்
கன்னி இன்று போவதெங்கே
முன்னும் பின்னும் காவல் இன்றி
தன்னந்தனி ஆவதெங்கே
குறை சொல்லும் மாப்பிள்ளை
யாரும் இன்றி செல்வதெங்கே (பட்டுப் பாவாடை)
Thursday, June 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் அருமை
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி