மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க -
சும்மா மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க -
பல்லை மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்தை )
பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிளே,
போட்டியிலே ஜெயிச்ச நீங்க புதுமையான ஆம்பளே!
என்னத்தான் புடிச்சிருக்கா இல்லையான்னு
மனசுலே இருக்கும் ரகசியத்தை
இழுத்துப்போடுங்க வெளியிலே (மொகத்தை )
முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க
இங்கே வர்ரதுன்னா முறையிலேதும் நெருக்கம் வேணுங்க -
எண்ணத்தில் பொருத்தம் வேணுங்க அது இல்லேன்னா
இரண்டு பக்கமும் இன்பம் ஏதுங்க?
அன்னம்போல நடக்குமுங்க ஆளைக்கண்டா பறக்குமுங்க
என்னமோன்னு நினைக்காதீங்க -
நான் சொல்லிப்புட்டேன்... (மொகத்தை )
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி