Thursday, June 12, 2008

மாறாதையா மாறாது ...

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )

காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது


மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது
காத்துல விளக்கை ஏத்திவச்சாலும் எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வாசாலும்
ஆடும் கண்களை அடக்கி வாசாலும்
(மாறாதையா )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி