வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
பத்திப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா
பத்திப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய் கொள்ளுவது முறையா
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைச்சவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
Monday, June 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி