திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமன்திருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம் ... ஒஹோஹ் ஹோ ஹோய்
செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம்
ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ...ஓஹோஹோ ஹோ..ஹோய்
Tuesday, June 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி