கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)
பொன்னான பொண்ணு தனியா நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)
சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
நெஞ்சிலே கொண்ட அன்பு-
இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு-
இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு...
எதிர் பாராமலே வந்த வம்பு (கண்ணோட)
கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கு வந்த அன்பு....
அதில் என்னைக்கும் இல்லே வம்பு...
அது என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு...
ஆஹா வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)
எங்கே என் இன்பம் எங்கே?
என் இதயம் எங்கே?
பகைவர் நடுங்கும் நடை எங்கே?-
என் பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)
வீரமாமுகம் தெரியுதே-
அது வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
காதல் வளருதே! வாழ்வு மலருதே!
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி