மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்ட தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்
Friday, June 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பழைய அருமையான பாடல்.
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி