புரட்சி கலை கவிதை நடையே
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக
புதுமை பென்ன்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்
அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை
ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்
தீமை தன்னை என்னும் போது அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது வெட்க்கம் கொள்ளுங்கள் !
புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி
Monday, June 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி