தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை (2)
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை (2)
பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ...
பெண்ணாக உருவானதோ
பூமீது விளையாடும் பொன்வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ...
கண்ணாக உருவானதோ
அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள்
எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
பாராத பார்வைக்கு பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது...
மார்போடு நான் வந்தது
பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது...
நல்ல நாள் பார்த்து நான் வந்தது
நெய்வாசக் குழல்மீது கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ (2)
நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ...
நீ தந்த விலையல்லவோ
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
Thursday, June 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி