Monday, June 2, 2008

பாடுவோர் பாடினால் ...

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
(பாடுவோர் பாடினால்)

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம்பிறை
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
( பாடுவோர் பாடினால் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி