Tuesday, June 3, 2008

ஒரு பக்கம் பாக்குறா ...

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா
((ஒரு பக்கம்))

காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது
((ஒரு பக்கம்))

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி