Friday, June 6, 2008

திருவளர்செல்வியோ ...

திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ


ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
தேவை ஒரு காவிய செல்வம்
தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
எல்லாம் உன்னோடு தானோ ஓ ஓ ஓ ஓஓஒ
(திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ )


பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து இம்ம்ம்ம்
மணவாளன் ஆசை அறிந்து இம்ம்ம்ம்ம்
உறவோடு ஊடல் புரிந்து இம்ம்ம்ம்ம்
நிலவோடு தேடும் விருந்து இம்ம்ம்ம்
எல்லாம் உன்னோடு தானோ
( திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ ) லலலலல

மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம்
ராகங்கள் பாடிய கண்கள்
மானத்தில் ஊறிய உள்ளம்
வரவேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி