யாருக்கு யார் சொந்தம் என்பது -
என்னைநேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
(யாருக்கு)
வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே
மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாம் துள்ளுதே -
இதில்வண்ணமலர் என்றும் வண்டுக்குதான் சொந்தம்
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்
(யாருக்கு)
தந்தப் பல் எழில் கண்டு தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
கொத்துக் கிளிக்கேதான் கோவைக்கனி சொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது
(யாருக்கு)
Monday, June 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி