Welcome hero happy marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு
கன்னி மயில் பெண் இவளோ மேரி
கட்டியதே இல்ல இவள் சாரி
பாரிஸ் லண்டன் சென்று வந்த
பெண்ணுங்க பொன்னழகு மின்ன உடல் மார்பிள்
கன்னமது தின்ன வரும் ஆப்பிள்
பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
காதல் காவியம் பாடிட கேட்கும்
அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா ஓகே
மேரி சாரி ஆப்பிள் கீப்பில் ஒன்னுமே புரியலையே
கண்ணகி போல் பெண் மணியை பார்த்து
கார்த்திகையில் கையோடு கை சேர்த்து
மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க
கார்த்திகையில் கையோடு கை சேர்த்து
மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க
இல்லறமே நல்லறமாய் கொண்டு
வள்ளுவனார் வாசுகி போல் வந்து
வாழபோகும் பாவை உண்டா சொல்லுங்க
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
மேள வாத்தியம் ஊர்வலம் போக
மேள வாத்தியம் ஊர்வலம் போக
பிப்பிபி டுடுடுடும்ம்
சின்ன இடை பின்னி வரும் பாபி
செல்ல மனம் கிள்ள வரும் பேபி
ஆடி பாடும் டீன் ஏஜ் கேர்ள் ஐ பாருங்க
கன்னி இவள் தந்தை ஒரு சீமான்
கப்பலிலே பங்குகளை பெறும் கோமான்
ஆஸ்திக்கெல்லாம் இந்த பொண்ணு தானுங்க
வான வேடிக்கை பாண்டு கச்சேரி
வான வேடிக்கை பாண்டு கச்சேரி
காரில் ஊர்வலம் சம்மதம் தானா
அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா என்ன
பாபி பேபி ஏஜ் உ கேர்ள் உ போச்சு டா
கார்குழலை ஆம்பளை போல் வெட்டி
காதுகளில் கை வளையல் கட்டி
நேரில் வந்தால் எதோ போல தோணுங்க
காசு பணம் என்னிடமும் உண்டு
காடு வயல் எத்தனையோ உண்டு
தேவை எல்லாம் தெய்வம் போல பொண்ணுங்க
தும்பை பூ போலே துளசி செடி போலே
தும்பை பூ போலே துளசி செடி போலே
பொண்ணை பாருங்க மாப்பிள்ளை இணங்க
பபபபா துடுத்து தும்
Welcome hero happy marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு
Tuesday, June 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி